புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 27, 2019)

ஞான போஜனம்

எரேமியா 3:15

உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள்.


ஒரு வாலிபன், அயலில் வாழ்ந்து வந்த பிரதேசத்தவனாகிய தன்னு டைய சக வகுப்பு மாணவனுடன் மிகவும் நட்புள்ளவனாக இருந்தான். இந்த வாலிபன் அந்த பிரதேசத்து நண்பன் வீட்டில் சேர்ந்து படிக்கும் போது, நண்பனின் வீட்;டார் இவனை தங்களுடைய நாட்டுக்குரிய போஜனங்களால் உபசரிப்பார்கள். இந்த விவகாரம், அடிக்கடி நடந்து வந்ததால், அந்த வாலிபனின் பெற் றோர், மகனே, நீ உன் நண்பனோடு சேர்ந்து படிப்பது நல்லது ஆனால் நீ வீட்டிலே சாப்பிடுவது உனக்கு நல் லது என்று கூறினார்கள். “அவர்கள் என்ன நஞ்சையா உண்கின்றார்கள்? அவர்களுடைய ஆகாரத்திலே என்ன குறை” என்று வாலிபன் கேட்டான். அவன் தாயார் அவனை நோக்கி: மகனே, அவர்களுடைய ஆகாரம் உரு சியானது, அவர்களுடைய விருந்தோம் பல் மேன்மையானது. ஆனால், உன்னுடைய உடலிலே சில குறை பாடுகள் உண்டு, அதைப்பற்றி எனக்கும் உன் தந்தைக்கும் மாத்திரமே நன்றாக தெரியும். நீ எதிர்காலத்தில் ஆரோக்கியமாக வாழ்வதற்கு, தற்போது நீ குறிப்பிட்ட ஆகாரத்தை உண்பதே உனக்கு நலம் என்றார். பிரியமானவர்களே, இதற்கொத்ததாகவே, உலகிலுள்ள சபை களும், சபையிலுள்ள விசுவாசிகளும், அதன் ஊழியர்களும் இருக்கி ன்றார்கள். நீங்கள் ஒரு சபையிலே அங்கத்தவராக இருப்பது தேவனு டைய சித்தமோ அல்லது சித்தம் இல்லையோ என்னும் சந்தேகம் உங்களிடம் இருக்குமென்றால், நல்மனதோடு தேவனிடத்தில் விண் ணப்பித்தால் அவர் அதை நிச்சயமாக வெளிப்படுத்துவார். அப்படி யாக நீங்கள் ஆராதிக்கும் இடத்தை உறுதிசெய்த பின்பு, அங்கே உங்களுக்கு கொடுக்கும் ஆவிக்குரிய ஆகாரமாகிய தேவனுடைய செய்தி, உங்களுக்கு மிகவும் அவசியமானது. ஞாயிறு உங்கள் ஆலயத்தில் தேவசெய்தியை கேட்ட பின்பு, வீடு சென்று இன்னும் அநேக செய்திகளை கேட்காமல், உங்களுக்கு கொடுக்கப்பட்ட மேய் ப்பன் வழியாக தேவன் கூறிய செய்தியை அந்த கிழமை பூராவும் தியா னியுங்கள், தேவனுடைய ஒழுங்கு முறைக்கு நாங்கள் கீழ்ப்படியும் போது, எங்கள் வாழ்வில் பெரிதான சமாதானத்தை கண்டடைவோம்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்தறிகின்ற தேவனே, என் ஆவிக்குரிய வளர்ச்சிக்காக நீர் ஏற்படுத்திய ஒழுங்கு முறைகளை நான் பின்பற்றி நடக்க என் மனக் கண்களை திறந்துவிடுவீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 13:17