புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 26, 2019)

நாங்கள் பெற்ற பணி

கொலோசெயர் 4:17

நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள்.


ஒரு சமயம், உலக பிரசித்திபெற்ற சுவிN~கர் ஒருவர், குறிப்பிட்ட நாட்டிற்கு வருகை தந்திருந்தார். அவரை சந்திக்கும்படியாக அநேக ஜனங்கள் திரண்டு சென்றார்கள். சிலர், தங்களுடைய ஆலயத்தில் நடக்கும் ஆராதனைகளையும், சிலர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்களையும் விட்டுவிட்டு அந்த சுவிசே~கருடைய ஆராத னையில் பங்குபற்றும்படி சென்றிரு ந்தார்கள். அந்த தேசத்திலே அநேக வருடங்களாக, தன் சொத்துக்களை யும், வாழ்வையும் முழுiமையாக அர் ப்பணித்து ஊழியம் செய்து வந்த ஒருவர் இருந்தார். “இன்றைய ஜெப க்கூட்டத்தை நிறுத்திவிட்டு நாங்கள் யாவரும் அங்கே ஆராதனைக்கு செல்வோமா” என்று சபையிலிருந்த சிலர் அந்த ஊழியரிடம் கேட்டார்கள். அந்த ஊழியர் “எங்கள் தேசத்திற்கு வருகை தந்திருக்கும் சுவிசே~ர், கர்த்தர் அவருக்கு கொடுத்த பணியை செய்கின்றார். அது போல நானும் எனக்கு கொடுத்த இந்த சிறிய பணியை நிறைவேற்ற வேண்டும். நான் எந்த விதத்திலும் அந்த சுவிN~கருக்கு எதிரானவன் அல்ல. எங்கள் ஆலயத்தில் நடக்கும் ஆராதனைக்கு எதிர்பார்ப்போடு வரும் விசுவாசிகளை நான் வழிநடத்த வேண்டும், நீங்கள் அங்கே போவதற்கு எந்தத் தடையும் இல்லை” என்று தயவுடன் மறுமொழி கூறினார். ஆம் பிரியமானவர்களே, நாங்கள் பெற்ற பணி, சிறிதான தாகவோ அல்லது பெரிதானதாகவோ இருக்கலாம். அதை நிறைவே ற்றுவதே எங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, நீங்கள் போய் அந்த பிரபல்யமான சுவிசே~கரிடம், உங்கள் கூட்டம் முடிந்த பின்பு, எங்கள் சபையில் இரண்டு கிழமைகள் நின்று செல்லு ங்கள் என்று கூறினால், அவர் என்ன சொல்லுவார்? மன்னிக்கவும், எனக்கு இன்னுமொரு தேசத்திலே ஊழியம் உண்டு நான் அங்கு போக வேண்டும் என கூறுவார் அல்லவா. நாங்கள் மற்றய ஊழியங்களுக்காகவும், ஊழியர்களுக்காகவும் ஜெபம் செய்ய வேண் டும். எங்களால் முடிந்த ஆதரவை வழங்க வேண்டும். அவர்களுக்கு ரிய கனத்தைக் கொடுக்க வேண்டும். சமயம் வாய்த்தால் அவர்களை சந்திப்பது நல்லது. ஆனால் எந்த விதத்திலும் எங்களுக்கு கொடுத்த பொறுப்பை நாங்கள் அற்பமாக எடுக்கக்கூடாது.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, என்னை நம்பி, நீர் எனக்குத் தந்த பொறுப்பை நான் அற்பமாக எடுத்துக் கொள்ளாமல், முழுமனதோடு அதை நிறைவேற்றி முடிக்க என்னை பெலப்படுத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:12