புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 25, 2019)

நிறைவானதை நோக்கி…

பிலிப்பியர் 3:20

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


தன் பிள்ளைகளை நேசிக்கும் தந்தை ஒருவன், நாளாந்தம் கடுமை யாக உழைத்து, நாட்கூலியில் தன் குடும்பத்தை கவனித்து வந்தான். ஆனால், அவனுடைய பிள்ளைகளில் ஒருவன், வீட்டிற்கு வந்ததும், இந்த வீட்டில் ஒழுங்காக நாற்காலி இல்லை, ஒழுங்கான சாப்பாடு இல்லை, ஒழுங்கான படுக்கை இல்லை என்று எப்போதும் குறை கூறிக்கொண்டே இருந்தான். அவன் கூறி யவைகள் யாவும் உண்மை. ஆனால், அவன் தானும் அந்த குடும்பத்தின் அங் கத்தவன் என்பதை நினையாது, குறை வுகளை நிறைவு படுத்தும்படிக்கு தன் தந்தைக்கு உதவி செய்வதற்கு பதி லாக, எப்போதும், குடும்பத்தின் குறை களையே பேசிக் கொண்டிருந்ததால், பெற்றோர் மனவேதனைப்பட்டார்கள். நீங்கள் தற்போது கிறிஸ்தவ ஆவி க்குரிய ஐக்கியமொன்றிலே இணைந் திருந்தால், முதலாவதாக, நான் இந்த ஆலயத்திலே இருந்து தேவனை ஆராதிக்கப் போகின்றேன் என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அங்கே அங்கத்தவராக இருக்கும்படி உறுதி செய்த பின்பு, அந்த குறை கூறும் மகனைப் போல இருக்காமல், குறைகளை நிறைவுபடுத்தும்படியாய், பிரயாசப்படுங்கள். அதற்குரிய பெலனும், ஆதாரமும், அதிகாரமும் உங்களுக்கு இல்லை என்றால், கருத்தோடு தேவனிடம் ஜெபியுங்கள். நீங்கள் ஊக்கமாக ஜெபித்தால் தேவன் மாறுதல்களை கொண்டுவருவார். ஜெபத்தினாலே ஜெயம் உண்டு. பல வேளைகளிலே மாறுதல்கள் மற்றவர்களில் அல்ல எங்கள் உள்ளத்திலேயே உண்டாகுகின்றது. உங்களுடைய சொந்த தீர் மானத்தின்படி நீங்கள் ஆராதிக்கும்படி தெரிந்து கொண்ட சபையிலே, கருத்தோடு தேவனை சேவித்து, உங்கள் அழைப்பையும் தெரிந்து கொள்ளுதலையும் உறுதிப்படுத்தி, இயேசு கிறிஸ்துவுக்குள், உங்க ளைக் குறித்ததான பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுங்கள். குறைவு களையே நாங்கள் உற்றுப் பார்க்கும் போது, எங்கள் நிறை வான நோக்கத்தை மறந்து போய்விடுவோம். எங்களுடைய குடியிருப்பு இந்த பூமிக்குரியது அல்ல என்பதை ஒரு போதும் மறந்து போகாமல், எல் லாவற்றையும் தேவனுடைய பாதத்திலே வைத்து ஜெபம் செய்வோம்.

ஜெபம்:

என்றும் மாறாத தேவனே, இந்த உலகிலே இருக்கும் குறைகளையே உற்று நோக்கி, நிறைவான உம் அநாதி திட்டத்தை மறந்து போகாமலிருக்க உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - தீத்து 1:15