புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 24, 2019)

தனிப்பட்ட வளர்ச்சி

யோவான் 15:5

நானே திராட்சச்செடி, நீங் கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனி லும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிக ளைக் கொடுப்பான்;


ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமா க்களாய் ஒன்றையே சிந்தித்து, ஒருவருக்கொருவர் புத்திசொல்லி, திட னற்றவர்களை தேற்றும்படியாகவும், பலவீனரைத் தாங்கும்படியாக வும் சபை ஐக்கியம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனால் வரும் பலன் அதிகம். எனினும் கிறிஸ்த வாழ்க்கையில் தனிப்பட்ட வளர்ச்சி இன்றியமையாதது. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனு~ருக்கும் மத்திய ஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட் கும் பொருளாகத் தம்மை ஒப்புக் கொடுத்த மனு~னாகிய கிறிஸ்து இயேசு அவரே. கர்த்தராகிய இயேசு ஏற்படுத்திய ஊழியர்கள், நாங்கள் இயேசுவிலே நிலைத்திருக்கும்படி, அவ ரோடு எங்களை சேர்த்துவிடும்படியாக எங்களை வழிநடத்துகின்றார்கள். அதா வது, இயேசுவே திராட்சைசெடி, அந்த செடியிலே, நாங்கள் ஒவ்வொருவரும் தனிப்பட இணைக்கப்பட்டிரு க்கின் றோம். ஊழியர்களும் தனிப்பட இயேசுவிலே இணைந்திருப்பது போல, விசுவாசிகள் ஒவ்வொருவரும் தனிப்பட இணைந்திருக்கின்றா ர்கள். எங்களுக்கும் இயேசுவுக்கும் இடையில் எந்த மனிதர்களோ, வேறு எந்த சிரு~;டியோ இருக்க முடியாது. இந்த உலகிலே பரிசுத்த வாழ்வு வாழ்ந்து, மறைந்து போனவர்களோ இந்த உலகிலே தற் போது வாழும் பரிசுத்தவான்களோ எங்களுக்கு மத்தியஸ்தம் வகிக்க முடியாது. எல்லா மனு~ரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறி கிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனு~ருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.நாங்கள் கூடி வாழ்ந்தாலும், நாங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலோ, குடும்ப வாழ்க்கையிலோ, சபை சமுக வாழ்க்கையிலோ, நாங்கள் தனிப்பட்ட தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் சந்தர்ப்பம் வரும். அந்த வேளைகளிலே, எங்களுக்கு உதவுவதற்கு யாரும் இரு க்க மாட்டார்கள். ஆனால் நாங்கள் இயேசுவோடு இணைந்திருந்தால், எந்த சூழ்நிலையிலும் அவர் அன்பைவிட்டு எங்களை ஏதும் பிரிக் காது. எனவே தேவனை அறிகின்ற அறிவில் நாங்கள் அனுதினமும் வளரவேண்டும். அவரிலே நிலைத்திருந்தால், என்ன நடந்தாலும் ஏது நடந்தாலும் அவர் எங்களை கைவிடமாட்டார்.

ஜெபம்:

ருபை நிறைந்த தேவனே, கிறிஸ்துவிலே நிலைத்திருந்து கனி கொடுக்கும் வாழ்க்கையில் அனுதினமும் வளர்ந்து பெருகும்படியாய் என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 2:4-5