புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 21, 2019)

மனிதனுடைய யோசனை

சங்கீதம் 146:4

அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண் ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.


இன்றைய உலகில் பல தீர்மானங்கள் ஆய்வுகளின் அடிப்படையில் (கணக்கெடுப்பு) எடுக்கப்படுகின்றது. உணவு பொருட்களை உற்பத்தி செய்வோர், வாடிக்கையாளர்களின் விருப்பம் என்ன என்பதை அறி யும்படி ஆய்வுகளை நடத்துகின்றார்கள். அந்த ஆய்வுகளின் அடிப் படையில் தங்கள் உற்பத்தியை கட்டுப்படுத்துகின்றார்கள். இப்படியாக இந்த உலகிலே, ஆய்வுகளும் வாக் கெடுப்புக்களும் பல மட்டங்களிலே நடைபெற்று வருகின்றது. சில நாடுக ளிலே, தேவன் பாவம் என்று விலக் கிய காரியங்களைக் கூட, ஆய்வுகளை யும், வாக்கெடுப்புகளையும் மையமாக வைத்து உத்தியோகபூர்வமான சட்ட ங்களாக மாற்றுகின்றார்கள். இன்று சில சபைகளிலும் இப்படிப்பட்ட ஆய் வுகளையும் வாக்கெடுப்புக்களையும் செய்கின்றார்கள். ஆய்வுகளும் வாக்கெடுப்புக்களும் மக்களின் அபிப் பிராயத்தை தெரிவிக்கின்றது. அந்த அபிப்பிராயம் தேவனுடைய பார் வையிலே ஏற்புடையதாக இருக்கலாம் அல்லது தகாதவைகளாக இரு க்கலாம். காலங்கள் கர்த்தருடைய கரத்திலிருக்கின்றது. மனிதன், காலையில் தோன்றி மாலையில் மறையும் புல்லின் பூவுக்கு ஒத் திருக்கின்றான். அவன் மறையும் நாளிலே அவன் யோசனை அழிந்து போகும். மனிதர்கள் தங்கள் அறிவுக்கு எட்டியபடி, தங்கள் நாட்டிற்கு ஒரு தலைவரை தெரிந்து கொள்கின்றார்கள், சில ஆண்டுகள் சென்றதும், தாங்கள் தெரிந்த தலைவர்கள் நாட்டுக்கு ஆகாதவர்கள் என்று கூறுகின்றார்கள். மற்றய மனிதர்களின் இருதயத்தில் என்ன இருக்கின்றது என்பதை ஒரு மனிதனும் அறியான். நாளை என்ன நடக்கும் என்பதையும் ஒரு மனிதனாலும் திட்டமாக கூற முடியாது. எனவே மனிதனுக்கு நன்மை எது? தீமை எது? என்பதை தேவன் ஒரு வரே அறிந்தவராயிக்கின்றார். மனிதர்களுடைய விரும்பத்தை அல்ல, தேவனுடைய சித்தத்தை செய்யும்படியாக வேறு பிரிக்கப்பட்டிருக்கி ன்றோம். எனவே நாங்கள் ஆய்வுகளிலும், வாக்கெடுப்புக்களிலும் பங் குபெற்ற நேர்ந்தாலும், மனிதர்களுடைய விருப்பப்படியல்ல, எங்க ளுடைய எண்ணப்படி அல்ல, தேவனுடைய சித்தப்படி நாங்கள் செய லாற்ற வேண்டும். தேவ சித்தம் இல்லாத பெரும்பான்மையான முடிவில் எந்த பிரயோஜனமும் இல்லாமலே போய்விடும்.

ஜெபம்:

சகலமும் படைத்த தேவனே, நீர் ஒருவரே என் வாழ்விற்கு நன்மை எது என அறிந்திருக்கின்றீர். என் சுயவிருப்பப்படி தீர்மானங்களை எடுக்காமல், உம் வார்த்தையின்படி வாழ என்னை பெலப்படுத் தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 சாமு 16:7