புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 16, 2019)

பிரிதெடுக்கப்பட்ட பாத்திரம்

பிலிப்பியர் 1:21

கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். முடியும்.


பரிசுத்த வேதாகமத்திலுள்ள, புதிய ஏற்பாட்டு, 27 புத்தகங்களிலே, 13 புத்தகங்கள், தேவ ஊழியரான பவுல் வழியாக எங்களுக்கு அருள ப்பட்டிருக்கின்றது. யூதர் அல்லாதவர்களுக்கு நற்செய்தியை அறிவி ப்பதில் இவர் முன்னோடியாக விளங்கினார். கிறிஸ்துவின் நற்செய்தி அறிவித்ததன் நிமித்தம் பல பாடுகளை சகித்தார். தன் வாழ்வை திருப்பணிக்கு முற்றாக ஒப்புக் கொடு த்த இவர், மரணம் வரை கர்த்தருக்கு உண்மையாக இருந்தார். புரு~ர்களு க்கும், ஸ்திரிகளுக்கும், பிள்ளைகளு க்கும், வயதானவர்களும், விதவைக ளுக்கும், ஊழியர்களுக்கும், வாலிபர் களுக்கும், மற்றும் யாவருக்கும் ஆவிக்குரிய அறிவுரைகளை எழுதி வைத்துள்ளார். இயேசுவே வாக்களிகப்பட்ட மீட்பர் என்று அறியும் முன்னதாக, இவர் யூத மார்க் கத்தை முழுமையாக பின்பற்றி வந்தார். அன்றைய உலகின் சமுதாய அந்தஸ்துள்ளவரும், கல்விமானுமாக இருந்தார். கிறிஸ்தவர்களை சிறை ப்பிடிப்பதிலும், துன்புறுத் துவதிலும் முன்னோடியாக இருந்து வந்தார். இயேசு கிறிஸ்துவே தெய்வம் என்று அறிந்த நாள் முதல் தன் வாழ்க்கையை முற்றும் முழுவதுமாக இயேசுவுக்கு ஒப்புக் கொடு த்தார். இவர் கிறிஸ்துவை அறிய முன்பு, கிறிஸ்தவத்திற்கு எதிராக இருந்தார் என்று கூறி, இவர் வழியாக தேவன் கொடுத்த அறிவுரை களை நாங்கள் தட்டிக் கழிக்கலாமா? தேவன் தன் பணிக்காக ஒரு பாத்திரத்தை பிரித்தெடுத்தால், அது தேவனுடைய நியமனம். அதை யாரும் அசட்டை செய்ய முடியாது. “அவன் புறஜாதிகளுக்கும் ராஜா க்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்து கொண்ட பாத்திரமாயிருக்கிறான். அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண் டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்று கர்த்தர் பவு லைக் குறித்து சாட்சி கூறினார். கிறிஸ்துவை அறிய முன் இவரிடத்தி லிருந்த நீதி நியாயங்களையும், சமுதாய அந்தஸ்து, மற்றும் கல்வி அறிவையும் குறித்து பெருமையடையாமல், அவைகளை ந~;டம் என் றும் குப்பை என்றும் கருதினார். வாழ்வானாலும் சாவானாலும் கிறிஸ் துவுக்காக எதையும் செய்ய ஆயத்தமாக இருந்தார். எங்களுடைய வாழ்க்கையிலும், கிறிஸ்துவை அறிய முன் இருந்த உலக மேன் மைகளை நாங்களும் குப்பையும் ந~;டமுமாக விட்டு விடுவோம்.

ஜெபம்:

மகிமையின் தேவனே, இந்த உலக அளவுகோலின்படி எனக்கு இருக்கும் மேன்மைகளை தள்ளிவிட்டு, நீரே எங்கள் ஒப்பற்ற செல்வம் என்பதை உணரும்படியான உள்ளத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப் 9:1-16