புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 07, 2019)

பிரியமான தாவீது

சங்கீதம் 16:5

கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்.


தேவனாகிய கர்த்தர் சவுல் ராஜாவை தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத் துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார். தாவீது என்னும் இளைஞன், தன்னுடைய தகப்பனுக்கு இருந்த கொஞ்ச ஆடுகளை மேய்த்து வந்தான். அந்த நாட்களிலே, கர்த்தர் அவனை வேறு பிரித்து, ராஜாவாக அபிN~கம் செய்தார். தாவீது சமஸ்த இஸ்ரவேலுக்கும் ராஜாவாக பதவி ஏற்பதற்கு முன், தேவன் குறித்த காலம் நிறைவேறும் மட்டும், அநேக வருடங்கள், அவன் பொறுமை யாக இருக்க வேண்டியதாயிருந்தது. அந்த நாட்களிலே, சவுல் ராஜா அவனை கொன்று போடும்படி தரு ணம் பார்த்துக் கொண்டிருந்தான். தாவீதிற்கு, சவுல் ராஜாவை கொன்று போடும்படியான சந்தர்ப்பம் கிடைத்த போதும், அவன் ராஜாவின் மேல் கைபோடவில்லை. பின்பு, சவுல் ராஜா யுத்தத்தில், அந்நியரால், கொல்லப்பட்ட போது மனவேதனையோடு அழுதான். இப்படியாக தாவீது, தேவனாகிய கர்த்தருக்கும், நாட்டிற் கும், ராஜாவுக்கும் விசுவாசமுள்ளவனாக இருந்து வந்தான். தாழ்விட ங்களிலிருந்த தன்னை உயர்த்தின தேவனை நேசித்தான். சில வேளைகளிலே தேவனுக்கு எதிராக பாவம் செய்ததை உணர்ந்த போது, அல்லது தேவ ஊழியர்கள் அதை அவனுக்கு உணர்த்திய போது, தேவனுடைய பாதத்திலே தன்னைத் தாழ்த்தி, தன் குற்றங் களை ஏற்றுக் கொண்டு, மனந்திரும்புகின்ற இருதயமுள்ளவனாக இரு ந்தான். எங்களுடைய வாழ்க்கையிலும், தாவீதைப் போல, தேவன் முன் குறித்ததை நிறைவேற்றும் வரைக்கும், தேவனுடைய நேரத்திற்காக காத்திருக்க வேண்டும். எங்களை கடுமையாக நடத்துபவர்களை நாங் கள் நியாயந்தீர்க்க முற்படக்கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, எங் கள் குற்றங்களை நாங்கள் உணரும் போது அல்லது இன்னுமொ ருவர் வழியாக உணர்த்தப்படும் போது, பாவங்களை நியாயப்படுத்த முயலாமல், கர்த்தருடைய பாதத்தில் எங்ளை தாழ்;த்தி, அவற்றை அறிக்கையிட்டு விட்டுவிட வேண்டும். கர்த்தரே எங்கள் பங்கு என்பதின்படி அவருக்கே முதலிடம் கொடுக்க வேண்டும்.

ஜெபம்:

அரவணைக்கும் தேவனே, என் வாழ்க்கையில் நான் தவறும் போதும், உயர்வான நேரத்திலும், தாழ்வான நேரத்திலும் உம் பாதத்தில் என்னை அர்ப்பணித்து வாழ என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 51:1-19