புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 05, 2019)

சாமுவேல் தீர்க்கதரிசி

1 சாமுவேல் 12:4

அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு அநியாயஞ் செய்யவும் இல்லை; எங் களுக்கு இடுக்கண் செய் யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள்.


சாமுவேல் என்னும் தேவ ஊழியர், அவருடைய தாயாரின் பொருத்த னையின்படி, பால் மறந்த நாளிலிருந்து, தேவ ஆலயத்திலே வளர் ந்து வந்தார். அந்நாட்களிலே, ஆசாரியனாக இருந்த ஏலி என்பவனின் பிள்ளைகள் துன்மார்க்கமாய் நடந்து, ஆலயத்திற்கு பலியிட வரும் ஜனங்களை துன்பப்படுத்தினார்கள். ஆதலால் அந்த வாலிபரின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிக வும் பெரிதாயிருந்தது. ஆனாலும், அந்த சூழ்நிலையிலும், சாமுவேலா கிய பிள்ளையாண்டான், கர்த்தருக்கு பணிவிடை செய்து, கர்த்தருக்கும் மனு ~ருக்கும் பிரியமாக நடந்துகொண் டார். அவர் உயிரோடிக்கும் நாளெல் லாம் இஸ்ரவேலரை நீதியாக நியா யம் விசாரித்து வந்த பெரும் தீர்க்கத ரிசியாக இருந்தார். அவர் கிழவனும் நரைத்தவனுமானபோது ஜனங்களை நோக்கி: நான் யாருக்கு அநியாயஞ் செய்தேன்? யாருக்கு இடுக்கண்செ ய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியு ண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான். ஜனங்களோ, நீர் அப்படி ஒன்றுமே செய்யவில்லை, அதற்கு கர்த் தரும், இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சவுலும் சாட்சி என்று கூறினார்கள். பிரியமானவர்களே, சாமுவேல் என்னும் மனிதர், தேவ ஊழியத்திற் காக, சிறுவயதிலிருந்தே பிரத்தியேகமாக பிரித்தெடுக்கப்பட்டார். இவர் தேவனுக்கும் மனிதர்களுக்கும் உண்மையுள்ளவராக நடந்து வந்தார். இவர் எங்கள் யாவருக்கும் ஒரு அருமையான சாட்சி. சாமுவேல், தான் பின்பற்றி நடக்கும்படியாய், அவருக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்து வந்த ஒப்னி, பினெகாசு என்பவர்கள் முன் உதாரணமாக இருக்கவில்லை. ஆனாலும் சாமுவேல் அவர்களின் தீமையை பற்றிக் கொள்ளாமல், தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வாழ தன்னை ஒப்புக் கொடுத்தார். சில வேளைகளிலே, எங்களுக்கு முன் உதாரண மாக இருக்க வேண்டியவர்கள் தவறிப்போனாலும், நாங்கள், சாமுவே லைப் போல தேவ வசனத்திற்கு கீழ்ப்படிந்து, தேவனுக்கு பிரியமான வாழ்க்கை வாழ வேண்டும்.

ஜெபம்:

ஜெபம்: சர்வ வல்லமையுள்ள தேவனே, எங்கள் சூழ்நிலைகள் எதிரிடையாக இருந்தாலும், அவற்றைக் குறித்து முறுமுறுக்காமல், சாமுவேலைப் போல உம்முடைய வார்த்தைகளின் வழியில் வாழும்படி என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏரேமியா 1:5-7