புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 04, 2019)

திரளான சாட்சிகள்

எபிரெயர் 12:01

மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம் மைச் சூழ்ந்துகொண்டிருக்க


தேவனைச் சார்ந்து, வெற்றி வாழ்க்கை வாழ்ந்த அநேக தேவ பிள்ளை களை பரிசுத்த வேதாகமத்திலே காண்கின்றோம். அவர்களுடைய சாட் சியான வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்து, நாங்களும் அவர்களை பின்பற்றுவது எங்கள் ஆத்துமாவிற்கு நாங்கள் செய்யும் நன்மையாக இருக்கின்றது. இந்த உலகிலே அந்தந்த காலகட்டத்திற்குரிய சவால் கள் இருந்து கொண்டே வருகின்றது. நாம் சிறுவர்களாக இருந்த போது, எங்களை சூழ இருந்த வயதா னவர்கள், காலம் மாறிப் போய்விட்டது என்று கூறுவதை கேட்டிருக்கின்றோம். அப்படிப்பட்ட அறிக்கையை நாங்கள் இன்று எங்கள் பிள்ளைகளுக்கு கூறு கின்றோம். இன்று கணணி ஊடக தொழி ல்நுட்பம் பெரிதான வளர்ச்சி கண்டிரு ப்பதால், இந்த சந்ததியினர், இருக்கும் இடத்திலே இருந்து கொண்டு தங்கள் அலுவல்களை மிகவும் துரி தமாக நடத்தி வருகின்றார்கள். ஆனாலும், பாவத்தின் அடிப்படைக் காரணி மாறிப் போகவில்லை. ஆதியிலே முதல் பெற்றோர் தேவ னுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், பிசாசானவனின் சத்தத்திற்கு கீழ்ப்படிந்ததால் பாவம் செய்தார்கள். இந்த அடிப்படை காரணியாகிய “கீழ்ப்படியாமை” இன்று துரிதமாக செயல்ப்படுகின்றது. எனவே, பரிசுத்த வேதாகமத்திலுள்ள பாத்திரங்களை உற்று நோக்கிப் பார்த்து எங்கள் வழிகளை செம்மைப்படுத்திக் கொள்வது நல்லது. பாவம் செய்யாத மனு~ன் இல்லை, எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவ ர்களானார்கள் என வேதாகமத்திலே வாசிக்கின்றோம். எனினும், பரிசு த்த வேதாகமத்திலே, குறிப்பிடப்பட்டுள்ள சில பாத்திரங்கள், வெளி யரங்கமான குற்றங்கள் ஏதும் செய்ததாக குறிப்பிடப்படவில்லை. வேறு சில தேவபிள்ளைகள், தங்கள் வாழ்நாட்களில் பல குற்றங்களை செய் தார்கள், ஆனால் தேவனுடைய சத்தத்தை கேட்டபோது மனம்வருந்தி, மனம்திரும்பி தேவ சத்தத்திற்கு கீழ்ப்படிந்தார்கள். ஆனால் சிலர், குற்றங்களை செய்த பின்பும், மனம்வருந்தி, மனந்திரும்புவற்கு பதி லாக, தங்கள் நிலையை நியாயப்படுத்த முயன்றார்கள். இவர்கள் தேவனுக்கு கீழ்ப்படியும் மனதில்லாதவர்கள். எனவே எங்களை சூழ் ந்திருக்கும் சாட்சிகளை பார்த்து, தேவனிடத்தில் இன்னுமாய் சார்ந்து கொள்வதையே நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஜெபம்:

அன்பின் தேவனே, எங்களை சூழ்ந்திருக்கும் சாட்சிகளை உற்று நோக்கி, உம்முடைய வார்த்தைக்கு எப்போதும் கீழ்ப்படிகின்ற வாழ்க்கை வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 1:9