புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 03, 2019)

ஞான நன்மைகளின் பெருக்கம்

கொலோசெயர் 3:1

நீங்கள் கிறிஸ்துவுடன் கூட எழுந்ததுண்டா னால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றி ருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.


நாங்கள் ஆராதிக்க செல்லும் சபைகளிலுள்ள எங்கள் ஒன்றுகூடலை (ஐக்கியம், சபையை) நாங்கள் நேசிக்க வேண்டும். பொதுவாக சபை யின் அங்கத்தவர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும், எங்கள் சபைக்கு ஒரு வசதியான கட்டிடம் வேண்டும், ஒழுங்கான தளபாடங்கள் வேண் டும், தரமான ஒலிபெருக்கித் தொகுதி வேண்டும், மற்றும் வீடியோ மற்றும் கம்யூட்டர் சாதனங்கள் வேண்டும் என வாஞ்சிக்கின்றோம். இப்படிப்பட்ட வாஞ்சை தவறானது அல்ல. தேவனுக்கு சித்தமானால் அவர் அப்படியாக செய்வாராக! இவையாவற்றின் மத்தியிலும், தேவனுடைய அநாதி தீர்மான த்தை மறந்து விடக்கூடாது. பொருளா தார வளர்;ச்சி உண்டாகும் போது, நாங் கள் விரும்பிய பிரகாரமாக கட்டிடங்கள், சாதனங்களை கொள்வனவு செய்து கொள்ளலாம். இப்படியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறியாதவர்க ளும், தங்கள் அந்நிய ஆராதனை முறைமைகளை இடாம்பீகரமான கட்டிடங்களிலே நடப்பிக்கின்றார்கள். நாங்கள் கிறிஸ்துவின் சரீரமாயும், தனித் தனியே அவயவங்களாயுமிருக்கின்றோம். அப்படியானால் எங்களிடத்திலே பெருக வேண்டிய காரியங்கள் என்ன? மறுரூபமாகும் கிறிஸ்தவனிடத்தில் பெருக வேண்டிய அன்பின் கிரியைகள் சிலவற் றைப் பார்ப்போம். “உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வ தியுங்கள், ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள். சந்தோஷ ப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழு ங்கள். ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்;” இவை யாவற்றின் மையப்பொருள் “கிறிஸ்துவின் அன்பு” ஆகும். என் னத்தை உண்போம், என்னத்தை அணிவோம் என்று கவலைப்படாதிரு ங்கள் என்று இயேசு கூறினார். இவையெல்லாம் எங்களுக்குத் தேவை என்பதை பரமபிதா அறிந்திருக்கின்றார். அதே போல, சபையாக நாங்கள் கூடி வரும் போது, எங்களுக்கு தேவையானவைகளை தேவன் அறிந் திருக்கின்றார். ஒரு மனிதன் தன் சரீரத்திற்காக திருப்த்தியாக உண்டு, விதவித மாக உடுத்தியும், அவன் உள்ளான மனிதனில் பெலப்படாதிரு ந்தால் அவனுக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை. எனவே, தனியாகவும், குடும்பமாகவும், சபையாகவும் ஆவிக்குரிய நன்மைகளில் பெருகுவோம்.

ஜெபம்:

சகலமும் அறிந்தவரே, நீர் உம்முடைய குமாரனையே எங்க ளுக்காக தந்தவர், மற்ற யாவற்றையும் தர, தயை பெருத்தவராயிருக்கி ன்றீர், உம்முடைய சித்தப்படி ஞான நன்மைகளில் பெருக என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:1-21