புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 30, 2019)

ஒரே சரீரம்

ரோமர் 12:5

அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம்.


“உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்;” (லூக்கா 6:27), “நீ தீமையி னாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு” (ரோமர் 12:21). உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்தி லும் அன்புகூருவாயாக. (மத்தேயு 22:39). இத்தகைய கொள்கைகள் கிறி ஸ்தவத்தின் அடித்தளமாக இருக்கின்றது. இத்தகைய கொள்கைகளை நீங்கள் எங்கே கடைப்பிடிக்க வேண் டும்? குடும்பத்திலா? வேலை செய்யும் இடத்திலா? கல்வி நிலையங்களிலா? கடைத் தெருக்களிலா? நண்பர்கள் உற வினர் மத்தியிலா? சமுதாயத்திலா? மேற்கூறப்பட்ட கொள்கைகள் எல்லா இடங்களிலும் கிறிஸ்தவனின் வாழ்க் கையில் மனதார கடைப்பிடிக்க வேண் டியவைகள். அப்படியானால், இந்த கொள்கைகள் நாங்கள் கூடி வரும் சபையில் கைக்கொள்ள வேண்டியதில்லையா? சபையிலுள்ளவர் களை உடன் சகோதரர், சக விசுவாசி, கிறிஸ்துவுள்குள் ஒரே வீட்டார் என்று பல அருமையான வார்த்தைகளால் வர்ணிக்கின்றோம். சத் துருக்களை சிநேகிக்க ஆயத்தம் என்றால், உங்கள் உடன் சகோதரன் உங்களை அறிந்தோ அறியாமலோ எதிர்த்து நின்றால் நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? நாங்கள் இன்னும் அதிகமாக அவர்களை சிநேகிக்க வேண்டுமல்லவா! இன்னும் அதிகமாக அவர்களை மன் னிக்க வேண்டும் அல்லவா! ஆம் பிரியமானவர்களே, சபையிலும், பிசாசானவன் சில களைகளை விதைத்திருக்கலாம். அங்கேயும் சில முரண்பாடுகள் தோன்றலாம். எனவே, கிறிஸ்துவின் அன்பை, மனதுரு க்கத்தை, மன்னிப்பை, தாழ்மையை, சாந்தத்தை இன்னும் அதிகம் கூட்டி வழங்க வேண்டும். நாங்கள் கிறிஸ்துவின் சரீரத்தில் ஒரு வருக்கொருவர் அவயவங்களாயிருக்கின்றோம். ஒருவனும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்பதே அவரின் நோக்கம். எங்கள் குறைகளிலே தேவன் எங்கள் மேல் நீடியபொறு மையுள்ளவராக இருப்பது போல, மற்றவர்களுடைய பெலவீன நேரங்களிலும், அவர் மற்றவர்கள் மேல் நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார். நாங்கள் அவரின் சரீரத்தின் அவயவமாக இருப்பதால், நாங்களும் மற்றவர்கள் மேல் நீடிய பொறுமையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

மனமிரங்கும் தேவனே, எங்களுக்கு தீமை செய்கின்றவர்கள் மேல் நாங்கள் நீடிய பொறுமையுள்ளவர்களாக இருந்து, இயேசுவைப் போல நாளுக்கு நாள் மாற்றமடையும்படி கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 12:14-27