புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 23, 2019)

மனமகிழ்சியோடு பணி செய்வோம்

1 கொரிந்தியர் 13:11

நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்.


சிறு பிராயத்திலே பிள்ளைகள், தங்களை எப்போதும் தங்கள் சகோத ரரோடு ஒப்பிட்டு முறையிடுவதுண்டு. “அது எப்படி நீங்கள் அண்ண ணுக்கு அப்படி செய்ய முடியும், எனக்கு நீங்கள் அப்படி செய்யவி ல்லையே?” அல்லது ஒரு வேலையை செய்யும்படி கூறும் போது, “ஏன் என்னிடம் மாத்திரம் கேட்கின்றீர் கள், என்னுடைய தங்கச்சியை கேட் டால் என்ன” இப்படியாக பிள்ளைகளு டைய முறையீடு அதிகமாக இருக்கும். தேவன் தம்முடைய ஊழியத்தை செய்யும்படி எவரையும் நிர்ப்பந்திப்பதி ல்லை. அவர் அழைக்கும் போது, அவர் சத்தத்திற்கு கீழ்ப்படியும் போது, தம்முடைய தாசர்கள் செய்ய வேண் டிய காரியங்களை போதிக்கின்றார். தாம் நேசிப்பவர்களுடன் உரிமை கொண்டாடுகின்றார். தேவ ஊழி யராகிய பவுல், தேவ ஊழியத்தின் பாதையிலே அநேக உபத்திர வங்களை சந்தித்தார். எனினும், தன்னை ஆட்கொண்ட இயேசுவை அதிகம் நேசித்தார். அவருக்காக எதையும் செய்ய ஆயத்தமாக இரு ந்தார். ஒரு சமயம் பவுல் என்பவர், நற்செய்தியின் நிமித்தம் காவலில் இருந்தபோது, அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமில் சாட்சி கொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார். பவுல் என்பவருக்கு எல்லாவற்றையும் தன் சொந்த பெலத்தினால் செய்து முடிக்க முடியாது என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆனால், அவர் இயேசுவுக்காக எதையும் செய்ய ஆயத்தமுள்ள இருதயத் தோடு இருந்ததினால், கர்த்தராகிய இயேசு தம்முடைய கிருபை வழி யாக பெலப்படுத்தினார். ஏன், பேதுரு அப்படி செய்ய முடியாது? ஏன் மற்ற சீ~ர்கள் அப்படி செய்யமுடியாது என பவுல் கேள்வி கேட்க வில்லை. ஏனெனில், பவுல் தானே, தன்னை அழைத்தவரையும், தன் னுடைய அழைப்பையும் நன்கு உறுதியாக அறிந்திருந்தார்;. எங்களு டைய குடும்ப, சபை, சமுதாய வாழ்க்கையில் எங்கள் குழந்தைத்த னமான பேச்சுக்களை விட்டுவிட்டு, எங்களை அழைத்தவர் இயேசு என்பதை உணர்ந்து, எங்களின் அழைப்பை உறுதிசெய்து கொண்டு, மனவிருப்பத்தோடு எமது பொறுப்புக்களை நிறைவேற்றுவோம்.

ஜெபம்:

அழைத்த தேவனே, குழந்தைத்தனமாக, என்னை இன்னுமொருவ ருடன் ஒப்பிட்டு, முறுமுறுப்போடு வாழாமல், நீர் தந்த பொறுப்புக்களை, மனவிருப்பத்தோடு நிறைவேற்ற கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - 2 கொரி 12:9