புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 22, 2019)

பிரித்தெடுக்கப்பட்டவர்கள்

எபிரெயர் 10:10

இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்


“புகைத்தல், மதுபானம் அருந்துதல், நெறிகெட்ட காட்சிகளை பார் த்தல் (தொலைகாட்சி, இன்ரநெற் ஊடகங்கள், திரைப்படம்), விக்கரக ஆராதனை, போன்ற தீங்கான காரியங்களை நாங்கள் செய்வதில்லை, ஏனெனில் நாங்கள் தேவனால் வேறுபிரிக்கப்பட்டவர்கள்” என்று சிலர் கூறிக் கொள்வார்கள். இவை மிகவும் பாராட்டப்படத்தக்கது. ஆனால், இத்தகைய பழக்கவழக்கங்களிலிருந்து எங்களை தவிர்த்துக் கொள்வதுடன் வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கை முற்றுப் பெறுவதில்லை. மாம்சத்தின் கிரியைக ளாகிய விபசாரம், வேசித்தனம், அசுத் தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங் கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபே தங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுக்கள் ஒன்றும் வேறுபிரிந்த வாழ்க்கை வாழும் மனி தனின் வாழ்வில் இருக்கக் கூடாது. (கலாத்தியர் 5:20-21). இப்படிப்பட்ட வைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதி ல்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங் களுக்குச் சொல்லுகிறேன் என்று தேவ ஊழியராகிய பவுல் அறிவுரை கூறியிருக்கின்றார். இவற்றுள் அநேக காரியங்கள் கூறப்பட்டிருக்கி ன்றது, அவற்றுள் சிலவற்றை எடுத்து ஆராய்ந்து பாருங்கள். விசுவாச குடும்பங்கள் யாவும் ஒருமனப்பட்டிருக்கின்றார்களா? அல்லது இன்னும் பகை, விரோதங்கள், சண்டைகள், பிரிவினைகள் சிலருடன் தொடருகின்றதா? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விலை மதிக்கமு டியாத பரிசுத்த இரத்தத்தினால் நாங்கள் மீட்கப்பட்டோம். அப் படியாக அவருடைய மீட்பைப் பெற்றவர்கள் யாவரும் பரிசுத்தமாக் கப்பட்டோம். ஆவியினாலும் ஜலத்தினாலும் மறுபடி பிறந்திருக்கின் றோம், வேறு பிரிக்கப்பட்டோம். இவை யாவும் உண்மை! ஆகையால் நாங்கள் அந்த மீட்பின் பலனாகிய நற்கிரியைகளை (ஆவியின் நற் கனிகளை) எங்கள் வாழ்க்கையில் நாங்கள் காண்பிக்க வேண்டும். பரி சுத்த வாழ்வு வாழும்படி அருமையான அழைப்பைப் பெற்ற நாங்கள், மாம்சத்தின் கிரியைகளுக்கு எங்களை மறுபடியும் ஒப்புக் கொடுத்து இருதயத்தை கடினப்படுத்தாமல் பரிசுத்த வாழ்வு வாழ்வோம்.

ஜெபம்:

பரலோக தேவனே, உம்முடைய அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்குட்பட்டவர்களாகும்படியாய் நீர் இந்த உன்னத அழைப்பை தந்தீர். பரிசுத்த வாழ்வு வாழும்படி என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபேசியர் 4:1-6