புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 21, 2019)

கிறிஸ்துவின் சாயல்

ரோமர் 6:5

ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர் த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.


கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதாமே, மரணத்தை வென்று உயிர்தெழு ந்த நாளை, இன்று நினைவு கூர்ந்து கொண்டாடுகின்றோம். ஏதேனிலே மனித குலத்தின் முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவாள் வழியாக வந்த நித்திய மரணத்தின் ஆக்கினையை அகற்றி, அவர் வழியாக பரலோகம் சென்றடையும் புதிதும் ஜீவனுமான ஒரே வழியை உண்டு பண்ணினார். நாமும் கிறிஸ்துவின் மர ணமதின் சாயலில் இணையும் போது, நாங்கள் உயிர்த்தெழுதலின் நாளிலே, நித்திய மகிமையின் சரீரத்தை அணிந் தவர்களாய் கிறிஸ்துவுக்குள் உயிர்தெ ழுவோம். அவருடைய மரணத்தின் சாய லில் இணைந்து கொள்ளும்படியாக, எங் கள் பழைய மனு~க்குரிய மாம்ச கிரி யைகளை சிலுவையிலே அறையவே ண்டும். கர்த்தராகிய இயேசுவே பாவ த்தை நீக்கும் பரிகாரி என்று ஏற்றுக் கொண்டு, ஞானஸ்நானத்தின் வழியாக, எங்கள் பழைய மனு~னை கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணியிரு க்கின்றோம்;. எப்படியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, நன்மை செய்கின்றவராயும், நன்மையே அன்றி தீமையை அறியாத வரும், குற் றமற்றவராகவும், பரிசுத்தராகவும் இருந்தபோதும், தமக்கு வந்த பாடு களை பொறுமையோடு ஏற்றுக் கொண்டார். நெருக்கப்படுகின்ற வேளை யிலும் நன்மை செய்தார். அதுபோலவே, கர்த்தராகிய இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் முன் இருந்த வாழ்க்கையை நாங்கள் விட்டு, இப்போது புதிதும் ஜீவனுமான வழியில் நடக்கும் படி ஞானஸ்நானத்தின் வழியாக அந்த மார்க்கத்திற்குள் நுழைந்திரு க்கின்றோம். இப்போது, அவருடைய இரண்டாம் வருகைக்காக காத்தி ருக்கின்றோம். எங்களுக்கு முன் ஓடி வெற்றி வாழ்க்கை வாழ்ந்த வர்கள், இந்த உலகத்தைவிட்டு கடந்து சென்றிருக்கின்றார்கள் (கிறி ஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்கள்). இன்று கர்த்தருடைய வருகை வருமாக இருந்தால், கர்த்தர் மறுபடியும் வரும்போது, அப்பொழுது கிறி ஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயி ரோடிருக்கும் நாமும் அவர்களோடேகூட எடுத்துக் கொள்ளப்பட்டு, இவ்வி தமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். எனவே, கிறிஸ்து வின் சாயலில் இணைந்து, வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்வோம்

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்முடைய உயிர்தெழுதலின் சாயலில் இணையும்படியாய், வேறுபிரிக்கப்பட்ட பரிசுத்த வாழ்வு வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கி றேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 15:52-57