புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 20, 2019)

கண்ணின் காட்சிகள்

லூக்கா 11:35

ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.


எங்கள் நெஞ்சின் வழிகளையும், கண்ணின் காட்சிகளையும் குறித்து நாங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எங்கள் இருதயம் வாஞ் சிக்கும் வழிகளை யாரும் அறியமுடியாது என மனிதர்கள் நினைக்கி ன்றார்கள். அது ஒரு அளவிற்கு உண்மையாக இருக்கலாம். ஆனால், காலப்போக்கில் எங்கள் இருதயத்தின் வாஞ்சையானது, படிப்படியாக கண்ணின் காட்சியாக மாறிவிடுகின் றது. அதாவது இருதயம் வாஞ்சிப் பதை கண்களும் வாஞ்சிக்கும். எனவே எங்கள் இருதயத்தின் தியானங்கள் கர் த்தருக்கு முன் தூய்மையாக மாற வேண்டும். நெறிகெட்ட காட்சிகளை பார் ப்பதைக் குறித்து எச்சரிக்கையாயிரு ங்கள். இன்று நாகரீகம் என்ற போர்வையிலே, உலகத்திலே நடக்கும் முறைகேடுகள், ஒளிப்பதிவு செய்யப்பட்டு, இன்ரநெற் ஊடகங்கள், தொலைக் காட்சிகள், மற்றும் திரைப்படங்கள் வழியாக மனிதர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்படுகின்றது. இப்படிப்பட்ட நெறிகெட்ட காட்சிகள், நீங்கள் அறியாதிருக்கின்ற பாவ பழக்கங்களை உங்க ளுக்கு அறிமுகப்படுத்தும். ஏதேனிலே, எப்படியாக பிசாசானவன் ஏவா ளின் பார்வையை மாற்றினானோ, அதே பிரகாரமாக, நீங்கள் பாவம் செய்வதை அல்லது மற்றவர்களை பாவத்திற்குள் விழுத்தும் காரிய ங்களை தூண்டிவிட்டு, அதை நாகரீகம் என்று மாற்றிவிடுவான். எல்லா காட்சிகளையும் உங்கள் கண்முன் கொண்டுவராதிருங்கள். நெறிமுறை யற்ற வாழ்க்கை, அவலட்சணமான ஆடைகள், தாய் தந்தையருக்கு கீழ்ப்படியாமல் வாலிபர்கள், கன்னிகைகளோடு செய்யும் பாவங்களை திரும்பத் திரும்ப திரைப்படங்கள், நாடகங்கள், நகைச்சுவைக் காட்சிகள் ஊடகங்கள், மற்றும் திரைகளின் வழியாக பார்ப்பதினால், உங்கள் சுத்த மனசாட்சி உணர்வற்றதாக மாறிவிடும். எனவே நீங்கள் அறியாத பாவ காரியங்கள், பாவத்தை தூண்டும் காரணிகளை உங்கள் பார் வைக்குட்படுத்தாதிருங்கள். கண்ணானது சரீரத்தின் விளக்காக இருக் கின்றது. எனவே நெறிமுறையற்ற கண்ணின் காட்சிகள் அந்த விள க்கை இருளடையச் செய்து, இருதயத்தின் தியானங்களை தேவ னுக்கு எதிரான மனித எண்ணங்களாக மாற்றிப் போடும். எனவே உங்கள் கண் இருளடையாதபடிக்கு எச்சரிக் கையாக இருங்கள்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, பரிசுத்த வாழ்வு வாழும்படியாய் என்னை வேறுபிரித்தீர். என் கண்ணின் காட்சிகள் உமக்குகந்ததாக இருக்கும்படி உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 19:14