புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 19, 2019)

கர்த்தர் காட்டிய வழியில்

மத்தேயு 5:44

உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்க ளைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.


நாடு கடந்து சென்று பிரபல்யமான கலாசாலைகளில் உயர்கல்வியை படித்தாலும், கற்றவைகளை தங்கள் வாழ்வில் அப்பியாசப்டுத்துகின் றவர்கள் மாத்திரமே அதன் பலனை கண்டடைவார்கள். உடற்பயிற்சியை குறித்து பலவிடயங்களை அறிந்த மனிதன், உடல் நலத்தை பேணுவ தற்காக, பல விடயங்களை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம். ஆனால் அந்த மனிதன், தான் கற்பித்து கொடுப்பது போல, தன் வாழ்க்கையில் உடற்பயிற்சியை செய் யாதிருப்பானென்றால் அதனால் அவன் நன்மை பெற முடியாது. எங்கள் வாழ் வின் வழியும் சத்தியமும் ஜீவனுமான கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே, உன்னதத்திலிருந்து தன்னை தாழ்த்தி மனிதனாய் பிறந்தார். இந்த உலகத் திலே எப்படி வெற்றி வாழ்க்கை வாழ் வது என்பதை கற்றுக் கொடுத்தார், அது மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கு கற்றுக் கொடுத்ததை தன் வாழ்விலே செய்து காட்டினார். சொல் லிலும் செயலிலும் பிதாவுக்கு முற்றாக கீழ்ப்படிந்தார். நாங்கள் குற்றம் செய்திருந்தால், அதன் நிமித்தம் நிந்திக்கப்பட்டு, பிறர் எங்களை துன்ப படுத்தும் போதும், சில வேளைகளிலே, நாங்கள் அவர்களுக்கு எதிர்த்து நிற்கின்றோம். ஆனால், எந்த குற்றமும் செய்யாத கர்த்தரை பகைத்தார்கள். அவரை நிந்தித்தார்கள், அவரை துன்பப்படுத்தினார் கள். தன்னை சிலுவையிலே பலியாக ஒப்புக் கொடுக்கின்ற வேளை யிலும், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்ப டுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள் என்று எங்களுக்கு கற்பித்து தந்த பிரகாரமாக, தன்னை துன்பப்படுத்துகின்றவர்களுக்காக பிதாவை நோக்கி விண்ணப்பம் பண்ணினார். பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். கர்த்தரின் பாடுகளையும் மரணத்தையும் அதிகமாக தியானிக் கின்ற இந்த நாளிலே, அவர் செய்து காட்டிய பிரகாரம், உங்களை யாராவது எந்த காரியத்திலாவது, காரணமின்றி துன்பப்படுத்தியிரு ந்தால், அவர்களை மன்னித்துவிடுங்கள். இன்று அவர்களை ஆசீர்வ தித்து விண்ணப்பம் பண்ணுங்கள். அப்படி உங்களை துன்பப்படுத்து கின்றவர்களுக்காக ஜெபிக்க ஆரம்பிக்கும் போது, உங்கள் வாழ்வில் பெரிதும் நன்மையுமான மாற்றங்களை காண்பீர்கள்.

ஜெபம்:

அன்பான தேவனே, எங்களை நிந்தித்து துன்பப் படுத்துகின்றவர்களின் முன்னிலையிலும் உமக்கு சாட்சியாக, உம்முடைய திருக் குமாரன் இயேசுவைப் போல நடந்து கொள்ள எங்களை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 54:1-12