புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 18, 2019)

பரத்திலிருந்து வரும் வல்லமை

லூக்கா 22:43

அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே, தாம் இந்த பூவுலகிற்கு வந்த நோக்கத்தை நிறை வேற்றும் படி மறுபடியும் உறுதிபூண்டார். அவர்; காட்டிக் கொடுக்க ப்பட்ட அந்த இராத்திரியிலே, பிதாவாகிய தேவனுடைய திரு ச்சித்தத்தை, அவருடைய திட்டப்படி நிறைவேற்றும்படியாக தம்மை சம்பூரணமாய் ஒப்புக் கொடுத்தார். அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணி னார். அவருடைய வேர்வை இரத்தத் தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது. பரலோகத்திலிருந்தவர், தம் மைத் தாழ்த்தி, மனித உரு எடுத்து, இந்த உலகிலே தோன்றி, மனித குல த்திற்கு நன்மை செய்து வந்தார். நன் மையே அன்றி தீமையை அறியாதவர். எண்ணுக்கடங்காத அதிசயங்களை செய் தவர். இப்போது அவர், அடுத்த நாளிலே, தாம் செய்ய வேண்டிய காரி யம் ஒன்று உண்டு. மரண பரியந்தம் தாம் தாழ்த்தப்பட வேண்டிய வேளை வந்தது. அதற்காகவே இந்த பூவுலகிற்கு வந்தேன் என்று தன்னை அர்ப்பணித்தார். பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்து வழியாக நம்மை தம்முடைய பிள்ளைகளாக்கிய பிதாவாகிய தேவன், எங்கள் வாழ் க்கை வழியாக தாம் மகிமை அடைய வேண்டும். நாங்கள் மனிதர்கள் மத்தியிலே பெயரும், புகழுடனும் நற்கிரியைகளை செய்கின்ற வேளை கள் உண்டு. அது மட்டுமல்ல, சில வேளைகளிலே, அவமானம் நிந் தைகளை கிறிஸ்துவின் பொருட்டு சகிக்க வேண்டிய நேரமும் எங்கள் வாழ்க்கையில் உண்டாகலாம். அந்த வேளை நம்மை நாம் தாழ்த்த வேண்டிய வேளை. நாங்கள் மற்றவர்களுக்கு கூறிய அறிவுரைகள், பிர சங்கங்கள், பக்திவிருத்திக்கான வார்த்தைகளை எங்கள் வாழ்க்கையில் வாழ்ந்து காட்ட வேண்டிய நேரம். அந்த வேளையில் நம்பினோர் கைவிடலாம். மனிதர்கள் காரணமின்றி நகைக்கலாம். செய்த நன்மை கள் எண்ணப்படாமல் போகலாம். ஆனால் அந்த வேளையானது எங்களை அழைத்த தேவன், எங்களில் மகிமையடையும் வேளை. நாங் கள் எங்களை தாழ்த்தி, தேவனுடைய சம்பூரணமான சித்தத்திற்கு எங் களை ஒப்புக் கொடுக்க வேண்டும். இத்தகைய அர்ப்பணிப்பு மனித பலத்திற்கு அப்பாற்பட்டது. பொறுமையோடு தேவனை நோக்கி ஜெபம் செய்யும் போது, அவர் எங்களை பெலப்படுத்துவார்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, கடினமான நேரத்திலும், உம்மு டைய திருச்சித்தத்தை என் வாழ்வில் நிறைவேற்றி முடிக்க, பரத்திலிருந்து வரும் வல்லமையை எனக்குத் தந்தருள் செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 5:10