புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 17, 2019)

தேவனை சார்ந்திருக்கும் இருதயம்

எபிரெயர் 8:10

என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்க ளில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.


உள் ஒன்று நினைத்து வெளியே வேறொன்றை சொல்கின்றவர்களை நாம் மாயக்காரர் என்று கூறுவோம். அதாவது, “நீங்கள் செய்த உதவிக்கு நன்றி” என்று ஒரு மனிதன் வாயினாலே கூறினாலும், அவன் இருதயத்திலே அந்த உதவியைக் குறித்த நன்றி உணர்வு அற்றவனாக இருப்பானென்றால், அந்த நன்றி வெறும் முகஸ்துதியா கவே இருக்கும். சில வேளைகளிலே, மனிதர்களை இலகுவாக முக ஸ்துதியினால் ஏமாற்றிவிடலாம் ஆனால் சர்வ வல்லமையுள்ள தேவன்தாமே, இருதயத்தை ஆராய்ந்து அறிகின் றவர். மாயக்காரரே, உங்களைக்குறி த்து: இந்த ஜனங்கள் தங்கள் வாயி னால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண் ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ என க்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்று சில யூதமதத் தலைவர்களுக்கு இயேசு கூறினார். நாங்கள் இப்படிப் பட்ட ஆலயத்திற்கு சென்று வருகின்றோம். அங்கே இவ்வளவு ஜனங்கள் இருக்கி ன்றார்கள். நாங்கள் இந்தப் பிரிவை சேர்ந்தவர்கள். எங்களுடைய உபதேசம் இவைகளே. எங்களுடைய விசுவாச அறிக்கை இது. எங்களுடைய தரிசனம் இது. என்று மனிதர்கள் பல விதமாக தங்கள் வாழ்க்கையைக் குறித்து பேசிக் கொள்ளலாம். எவை எப்படியாக இருந்தாலும், மேற்குறிப்பிடப்பட்ட காரணிகளால் மட்டும் ஒரு மனிதனுடைய வாழ்க்கை தேவனுக்கு பிரியமாக இருக்கப் போவ தில்லை. உள்ளந்திரியங்களை ஆராய்ந்து அறிகின்ற தேவன் எங்கள் இருதயத்தின் நினைவுகளை அறிந்திருக்கின்றார். எங்கள் இருதயம் தேவனைச் சார்ந்திருந்தால், எங்கள் நினைவுகள் தேவனுடையதாக இரு க்கும், எங்கள் இருதயத்தில் அவருடைய பிரமாணங்கள் இருக்கும். அவை மனமகிழ்ச்சியாக இருக்கும். எங்கள் இருதயம் அவர் வழிகளை வாஞ்சிக்கும். எங்கள் கிரியைகள் யாவும் தேவனுக்கு ஏற்புடையதாக இருக்கும். அவர் எங்கள் தேவனாகவும் நாங்கள் உண்மையிலே அவருடைய ஜனங்களாவும் இருப்போம்.

ஜெபம்:

இருதயங்களை ஆராய்ந்து அறிகின்ற தேவனே, நீர் முகஸ்துதியில் பிரியப்படுகின்றவர் அல்லர். முழு இருதயத்தோடும் உம்மை சேவிக்கும்படியாய், என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 139:23-24