புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 15, 2019)

என்னைத் தெரிந்து கொண்டார்

யோவான் 15:16

நீங்கள் என்னைத் தெரிந் துகொள்ளவில்லை> நான் உங்களைத் தெரிந்துகொ ண்டேன்;


இந்த உலகத்தைவிட்டு கடந்து செல்லும் நேரம் வந்தபோது, கர்த்த ராகிய இயேசு தாமே தம்முடைய சீ~ர்களை திடப்படுத்தும்படியாக “நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரி ந்துகொண்டேன்;” என்று கூறினார். அவர்களை மட்டுமல்ல, அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்ட எங்கள் ஒவ்வொருவரையும் இயேசு தாமே தமக்கென்று வேறு பிரித்திருக்கின்றார். ஆகவே, சவால்கள் உங்களை எதிர் நோக்கி வரும் போது தளர்ந்துவிடாதிருங்கள். கர்த்தராகிய இயேசு தாமே எங்களை தமக்கென தெரிந்து கொண்டிருந்தால், அவரை அறியாமல் யாரும் எங்களுக்கு ஏதும் செய்ய முடியாது என்ற விசுவாசத் தோடு நாங்கள் முன்னேறிச் செல்ல வேண்டும். கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கி றோமே. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதி காரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வரு ங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிரு~;டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயி த்திருக்கிறேன் என்று இயேசுவினுடைய சீ~னாகிய பவுல் இந்த வார்த்தைகளின் வழியாக எங்களுக்கு வலுவூட்டுகின்றார். இயேசுவின் நாமத்திலே நாங்கள் பிதாவாகிய தேவனை நோக்கி கேட்டுக்கொ ள்வது எதுவோ, அதை அவர் எங்களுக்கு கொடுக்கத்தக்கதாக, நாங் கள் போய் கனிகொடுக்கும்படிக்கும், எங்கள் கனி நிலைத்திருக்கும்படி க்கும் இயேசு எங்களை ஏற்படுத்தியிருக்கின்றார். அவரே எங்கள் புகலிடமாயிருக்கின்றார். எங்களை தமக்கென தெரிந்து கொண்டு, அவருக்குள் திவ்விய கனிகளை கொடுக்கும்படியாக நம்மை ஏற்படுத்தியவர், எங்களை ஒருபோதும் கைவிட மாட்டார. உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கின்றேன் என்று வாக்களித்தவர் எங்களோடிருக்கின்றார்.

ஜெபம்:

என்னை பெயர் சொல்லி அழைத்த தேவனே, பரிசுத்த வாழ்வு வாழும்படியாகவும், இயேசுவுக்குள் நற்கனிகளை கொடுக்கும்படியாகவும், என்னை ஏற்படுத்துனீர். தொடர்ந்தும் வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 8:36-39