புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 14, 2019)

எங்கள் போராயுதங்கள்

2 கொரிந்தியர் 10:4

எங்களுடைய போராயுத ங்கள் மாம்சத்துக்கேற்ற வைகளாயிராமல், அர ண்களை நிர்மூலமாக்கு கிறதற்கு தேவபலமுள் ளவைகளாயிருக்கிறது.


இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒரு சபை ஐக் கியத்தில் இணைந்து கொண்ட மனிதன். இயேசுவின் திருப்பணிக்காக, எந்த நிந்தையையும் சகிப்பேன், என்; உயிரைக் கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் வந்தாலும், நான் தயங்கமாட்டேன் என்று அறிக்கை செய் தான். சில ஆண்டுகள் சென்றபின், அவனுடைய பிள்ளைகளில் ஒரு வரை குறித்து சக விசுவாசி ஒருவர், ஏதோ ஒரு சந்தர்;ப்பத்தில் குறைவாக பேசியதால், அவன் கடும் கோபமடை ந்து, சக விசுவாசியோடு வாக்குவாதம் செய்து, சபையிலே பெரும் குழப்பங் களை ஏற்படுத்தினான். அந்த வேளை யிலே, அவன் தன்னுடைய இரட்சிப் பையும் விசுவாச அறிக்கையையும் மறந்து போனான். எவருடைய புத்திம தியையும் கேட்க அவனுக்கு மனதில் லாதிருந்தது. பிரியமானவர்களே, எங்க ளுடைய வாழ்க்கையில் யாவும் இன்ப கரமாக இருக்கும் போது, இயேசுவின் நற்செய்திக்காக பல தியாகங்களை செய்ய ஆயத்தமாயிருக்கிறோம் என அறிக்கை செய் வதுண்டு. அந் நேரங்களிலே, வேறு ஒரு சக விசுவாசி ஏதோ காரண த்திற்காக குழப்பம் அடைந்தால், அந்த விசுவாசி பொறுமையாக இருக்க வேண்டும் என்று பல அறிவுரைகளை வழங்குவோம். வேத த்திலே காணும் மனிதர்களில் பாவம் செய்த மனிதர்களைக் குறித்து, ஏன் இவ்வளவு அற்பமான காரியத்திற்காக பாவம் செய்தார்கள் என்று கூறிக் கொள்வோம். ஆனால், எவரும் என்னைப் பற்றி அல் லது என் குடும்பத்தைப் பற்றி தவறாக பேசினால் (அது உண்மை யான சம்பவமாக இருக்கலாம் அல்லது காரணமின்றி தவறாக பேசி யிருக்கலாம்), அந்தக் கணப்பொழுதில் எங்கள் மனநிலை, நாங்கள் மற்றவர்களுக்கு கூறிய அறிவுரைகளை மறந்து, பல நியாயங்களை பேசிக் கொள்வோம். நாங்கள் இப்படியான மனநிலையோடு தொட ர்ந்து வாழ முடியாது. நாங்கள் மாம்ச பிரகாரமாக போர் செய்கின்ற வர்களாய் அல்லவே. தேவன் தரும் பெலத்தால், தர்க்கங்களையும், எல்லா மனமேட்டிமைகளையும், பிசாசின் சகல தந்;திரங்களையும், நாங்கள் ஜெயிக்கின்றவர்களாக நாளுக்கு நாள் மாற வேண்டும்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, தமக்கு வந்த நிந்தை அவமானம் யாவையும் தாங்கிக் கொண்ட மீட்பராகிய இயேசுவைப் போல, நானும் பொறுமையுள்ளவனாக வாழ என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:2