புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 11, 2019)

மறுபரிசீலனை

புலம்பல் 3:40

நாம் நம்முடைய வழிக ளைச் சோதித்து ஆராய் ந்து, கர்த்தரிடத்தில் திரு ம்பக்கடவோம்.


தேவனோடுள்ள உறவில் வளர்ந்து வருகின்றவர்கள், தங்கள் நிலையை அவ்வப்போது ஆராய்ந்து அறிய வேண்டும். நான் இப்போது எங்கே நிற்கின்றேன்? எங்கே போகின்றேன்? என்ன செய்கின்றேன்? என்ற கேள்விகளை எங்களிடம் நாங்கள் கேட்டு, வேத வார்த்தைகளின்படி எங்களை மறுபரிசீலனை செய்து, முன்னேறிச் செல்ல வேண்டும். வேத வாசிப்பு, ஜெபம், சபை கூடிவ ருதல் போன்றவை, தேவனோடு வாழும் வெற்றியுள்ள வாழ்க்கைக்கு இன்றிய மையாதவைகள். அவற்றை ஆர்வமு டன் செய்து வரவேண்டும். வேத வாசி ப்பு, ஜெபம், சபை கூடிவருதலை ஒழுங் காக செய்து வருகின்றவர்கள், அவற் றால் தங்கள் வாழ்க்கையில் வந்த மாற் றங்கள் குறித்து, வருடத்திற்கு ஒரு முறை என்றாலும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாங்கள் எங்களை ஆராய்ந்து எங்கள் நிலையை அறிவதற்கான சில கேள்விகளை எங் களிடம் நாங்களே கேட்க வேண்டும். எனக்கெதிராக மற்றவர்கள் குற் றம் செய்தபோது, அல்லது தவறாக பேசினபோது, என்ன செய்தேன்? அவர்களை மன்னித்துவிட்டேனா? அவர்களுக்காக ஜெபம் செய்து வரு கின்றேனா? அல்லது அவர்களுக்கு பதிலடி கொடுத்தேனா? பதிலடி கொடுக்கும்படி சந்தர்ப்பத்தை பார்த்துக் கொண்டிருக்கின்றேனா? இப்ப டியாக பல கேள்விகளை நாங்கள் எங்களிடம் கேட்டுக்கொள்ளலாம். சபையில் பிரச்சனைகள் தலை தூக்கும் போது, என்ன செய்தேன்? மற்றவர்கள் குற்றத்தில் அகப்பட்ட போது என்ன செய்தேன்? இப்படி யாக எங்கள் வாழ்க்கையின் நிலையை நாங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். உள்ளான மனு~னானவன் நாளுக்குநாள் புதிதாக்கப்பட வேண்டும். வாகனத்தை ஓட்டிச் செல்கின்றவன், சாலை ஒழுங்கின் வேகத்தின்படி ஓட்டுவதற்கு, வேகத்தை அளவிடும் கருவியை அவ்வ ப்போது பார்த்து தன் வேகத்தை மாற்றிக் கொள்வான். தன் வாகனத் திற்கு பின்பாக என்ன நடக்கின்றது என கண்ணாடிகளிலே பார்த்துக் கொள்வான். அது போல கிறிஸ்துவுக்குள்ளான எங்களுடைய பய ணமும் இருக்க வேண்டும். என் கண் போன போக்கிற்கு போவேன் என்று வாழாமல், எங்கள் நிலையை ஆராய்ந்து அறிந்து, திருத்த வேண்டியவைகளைத் திருத்தும்படியாக, கர்த்தரிடத்தில் திரும்புவோம்.

ஜெபம்:

வழிகாட்டும் தேவனே, கண்போன போக்கில் வாழ்க்கையை நடத்தாமல், என் வாழ்க்கையில் நீர் விரும்பும் திவ்விய சுபாவங்கள் உருவாகும்படிக்கு என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 13:5