புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 09, 2019)

தேவனோடுள்ள உறவு

1 பேதுரு 2:3

நீங்கள் வளரும்படிஇ புதி தாய்ப் பிறந்த குழந்தை களைப்போலஇ திருவசன மாகிய களங்கமி ல்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.


தொழிற்சாலை ஒன்றிலே, சுகாதாரத்தையும் பாதுகாப்பையும், நெறிப்ப டுத்தும் இயக்குனர், ஒவ்வொரு மாதாமும் சுகாதாரமாக வாழ்வதைக் குறித்து பல பாடங்களை சொல்லிக் கொடுத்து வந்தார். அந்த தொழிற்சாலையிலே, உயர்பதவியிலே இருக்கும் அவருக்கு, நிச்சய மாக சுகாதாரத்தைக் குறித்தும், பாதுகாப்பைக் குறித்தும் அதிக காரி யங்கள் தெரியும். அவர் அதற்குரிய பாட ங்களை கலாசாலையில் படித்து பட் டம் பெற்றவர். அதைக் குறித்த புத்தக அறிவு அவருக்கு அதிகம் இருந்தது, ஆனால் அவரோ புகைப்பிடிக்கும் பழ க்கத்திற்கு அடிமையாக இருந்தார். அவ ருடைய கல்வியினால், அவர் கைநி றைய உழைத்தாலும், அந்த கல்வி அறிவு அவருடைய சுகாதாரத்திற்கு, எந்த பலனையும் கொடுக்கவில்லை. பிரியமானவர்களே, நாங்கள் தேவனை அறிகின்ற அறிவில் வளர வேண்டும் என்று பிரயாசப்படுகின்றோம். அதன் ஒரு படியாக, பரிசுத்த வேதாகமத்தை கற்றுக் கொள்ள வாஞ்சி க்கின்றோம். இது ஒரு நல்ல வாஞ்சை, அதை விட்டுவிடாதிருங்கள். ஆனால், தேவனை அறிகின்ற அறிவு, எங்கள் அறிவோடு நின்றுவிடக்கூடாது. தேவனை அறிகின்ற அறிவு, எங்களுக்கும் தேவ னுக்கும் உள்ள தனிப்பட்ட உறவின் அனுபவத்திலேயே வளர்ந்து வரு கின்றது. உதாரணமாக, ஆவியினாலும், ஜலத்தினாலும், மறுபடி பிறக் கின்றோம் என்பதைக்; குறித்து படிப்பது நல்லது ஆனால் மறுபடியும் பிறந்த அனுபவம் இல்லை என்றால், மறுபிறப்பைக் குறித்த அறி வினால் எங்கள் ஆத்துமாவிற்கு பலன் இல்லை. இவ்வண்ண மாகவே, பரிசுத்த வேதாகமத்தை கற்று, கற்றவைகளை எங்கள் வாழ் க்கையில் செயற்படுத்த வேண்டும். அப்படி வேதாகமத்தை கலாசா லைகளில் கற்று கலாநிதி பட்டம் பெற்றாலும், தேவனுடைய வார்த் தைகள் எங்கள் அனுபவத்தில் இல்லை என்றால், அந்த படிப்பினால் அதிக இளைப்பு உண்டாகும். அந்த கல்வியினால் இந்த உலகில் அங் கீகாரம் கிடைக்கலாம், நன்றாக உழைக்கலாம். அவை யாவும் இந்த உலகத்தோடு அழிந்து போகும். நாங்கள் அப்படி இருக்காமல், திருவசனத்தை கற்று அதன்படி நடக்கின்றவர்களாக மாறுவோம்.

ஜெபம்:

பரலோக தேவனே, உம்முடைய திருவார்த்தைகளை கற்று, அந்த வார்த்தைகளின்படி உம்மோடு வாழும் அனுபவத்தில் நாள் தோறும் வளர்ந்து பெருக எனக்கு உதவி புரிவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:22