புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 08, 2019)

இயேசுவே பரலோகத்தின் வாசல்

யோவான் 10:9

நானே வாசல், என் வழி யாய் ஒருவன் உட்பிர வேசித்தால், அவன் இர ட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடை வான்.


கர்த்தராகிய இயேசு இந்த பூமியிலே வாழ்ந்த நாட்களில் இருந்த பல யூதமதத் தலைவர்கள், தங்களுடைய கொள்கைளுக்கும், மதத்திற்கும் கர்த்தராகிய இயேசு கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும் என்று எதிர் பார்த்தார்கள். அதாவது, தாங்கள் செய்யும் குற்றங்களை குறித்து இயேசு பேசக்கூடாது, தங்களுடைய ஆலோசனைச் சங்கத் தின் நிய திகளுக்கு இயேசு கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்றும், தாங்கள் மட் டுமே தேவனுடைய பிரதிநிதிகள் என் றும் அகங்காரம் கொண்டார்கள். ஆனால் நாங்களோ, நாங்கள் செல்லும் ஆலய மோ, அப்படியான நிலைக்கு தள்ளப் பட்டுப் போய்விடக்கூடாது. இயேசு கிறி ஸ்து ஒருவரே பரலோகத்தின் வாச லாக இருக்கின்றார். (யோவான் 10:9) அவரே வாழ்வைக் கண்டடையும் வழி யாக இருக்கின்றார். இயேசு கிறிஸ்து வாலே அன்றி ஒருவரும் பிதாவினிடத் திற்கு வர முடியாது (யோவான் 14:6). தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனு ~ருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொரு ளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனு~னாகிய கிறிஸ்து இயேசு அவரே (1 தீமோ 2:5-6). இயேசுவுக்கு நிகரானவர் ஒருவருமில்லை. அவருக்கு பதிலீடாக எவரையும் வைக்க முடியாது. என்னோடு சேர்க் காதவன் சிதறடிக்கின்றான் என்று இயேசு கூறினார். அன்றியும் மனு~ குமாரன் (இயேசு) தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தி ன்மேல் வீற்றிருப்பார். (மத்தேயு 25:31). இயேசுவுக்கு பதிலீடாக வேறொருவர் இல்லை. எங்களில் எவரும் பரலோகத்தின் வாசல் ஆகிவிட முடியாது. கர்த்தருக்குள் நித்திரையடைந்த (இவ்வுலகத்தை விட்டு கடந்து சென்றிருக்கின்ற) பரிசுத்தவான்கள் பரலோகத்தின் வாசல் அல்ல. இந்த உலகிலே உள்ள ஒரு குறிப்பிட்ட சபையினர் மாத்திரம் பரலோகத்தின் வாசல் ஆக முடியாது. இப்பூமியிலே நாங்கள் வாழும் நாட்களில் மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை விட்டு விட்டு, பிதாவாகிய தேவனின் திருச் சித்தத்தை நிறைவேற்றுவதே, நாங்கள் எங்கள் ஆத்துமாவிற்கு செய்யக்கூடிய நன்மை.

ஜெபம்:

அன்பின் தேவனே நீர் என்னையும் நேசித்தீர் என்பதை மறந்து, நான் ஒருவனே பரிசுத்தன் என்ற மனமேட்டிமையை நான் அடையாமல், மற்றவர்களுக்கும் உம் அன்பை அறிவிக்க என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 25:31-46