புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 07, 2019)

நித்தியமானவைகளை நாடுங்கள்

யோவான் 14:27

என்னுடைய சமாதான த்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடு க்கிறதில்லை.


“போலிகளை குறித்து எச்சரிக்கையாயிருங்கள்” என்று ஒரு பிர பல்யமான ஆடை உற்பத்தியாளர் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஊடகங்கள்; மூலம் தெரிவித்திருந்தார்;. அந்த உற்பத்தியாளர்; உற் பத்தியாக்கும் பிரபல்யமான வர்த்தகச் சின்னத்தில் (டீசயனெ யெஅந) வேறு சிலர், தரம் குறைந்த பொருட்களை உற்பத்தி செய்து, மலிவு விலை யில் விற்பனை செய்து, வாடிக்கையாளர்களை ஏமாற்றி வந்ததால், அப்படியான எச்சரிப்பை வழங்கினார்கள். இந்த உலகிலே மனிதர்கள் அன்பு, நம்பிக்கை சமாதானம் போன்றவற்றைப்பற்றி அதிகம் பேசிக் கொள்வார்கள். இந்த குடும்பத்தினர் எங் களை உண்மையாக அன்பு செய்கின் றார்கள் என்று நம்பியிருந்தேன், ஆனால் அது போலி என்பதை உணர்ந்து கொண் டேன் என்று மனிதர்கள் சொல்லுவதை கேட்டிருக்கின்றோம். நாங்கள் அறிய வேண்டிய காரியம் என்னவென்றால், சூரியனுக்கு கீழ் மனிதன் படும் பிரயா சம் மாயை. ஏனெனில் அநித்தியமான உலகிலே நித்தியமானவைகளை கண்டு கொள்ள முடியாது. நாங்கள் நித்திய மானதை கண்டு கொள்ள வேண்டுமென்றால் நித்தியமானவரோடு இணைந்து இருக்க வேண்டும். நானே மெய்யான திராட்சை செடி, ஒரு வன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியை ப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவை களைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்து போம் என்று இயேசு சொன்னார். இயேசுவே அன்பின் ஊற்று. அவரே சமாதானம் தருகின்றவர், அவரே நம்பத்தக்க தேவன். அவரே நித்திய மானவர். நாங்கள் அவருடன் ஒட்டப்பட்டிருந்தால், அவருடைய மாறாத அன்பு, நித்திய சமாதானம், எங்களோடு இருக்கும். நாங்கள் ஒருபோ தும் ஏமாற்றம் அடைந்து போவதில்லை. ஆனால் இந்த உலகத்தை சார்ந்து, இந்த உலகம் தரும் போலியான அன்பிலும் சமாதானத்தி லும் திருப்தியடைய முயற்ச்சி செய்வோமென்றால், பெரிதான ஏமாற்ற த்திற்குள்ளாவோம். போலிகளுக்கு பிரவுவாகிய பிசாசானவன் துரித மாக தரும் தற்காலிகமான மாயைக்குள் சிக்கி விடாமல், நித்தியர் இயேசுவை சார்ந்திருப்போம்.

ஜெபம்:

என்றும் மாறாத தேவனே, அழிந்து போகும் இந்த உலகம் தரும் போலியானதும் அநித்தியமானதுமான சமாதானத்தை பற்றிக் கொள்ளாமல், உம்மைப் பற்றிக் கொள்ள எனக்கு கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:6-7