புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 06, 2019)

புதிதாக்கப்படுகின்ற நேரம்

பிலிப்பியர் 3:12

நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றிலும் தேறி னவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எத ற்காகப் பிடிக்கப்பட்டே னோ அதை நான் பிடித் துக்கொள்ளும்படி ஆசை யாய்த் தொடருகிறேன்.


உங்கள் உள்ளான மனிதன், நாளுக்கு நாள் கிறிஸ்துவுக்குள் புதிதா க்கப்பட்டு வருகின்றதா? அதை அவ்வப்போது நீங்கள் ஆராய்ந்து பார் க்க வேண்டும். இந்த சஞ்சிகையிலுள்ள தியானக் குறிப்புக்கள், உங் கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் நன்மையான மாற்றங்களை உண்டாக்க வேண்டும் என்ற உந்துதலை தரும்படியான நோக்கத்துடன் எழுதப்பட்டி ருக்கின்றது. தேவ வாக்கியங்கள் யாவும் ஆவியும் ஜீவனுமாயிருக்கின்றது. உங்க ளுக்கு உதவும்படி தூய ஆவியானவர் தாமே எப்போதும் சித்தமுள்ளவராக இரு க்கின்றார். ஆனால், நான் மாற்றமடைய வேண்டும், நாம் மறுரூபமாக வேண் டும் என்கின்ற எண்ணமும், தேவ வார்த் தைக்கு கீழ்ப்படிய வேண்டுமென்கிற இருதயமும் எம்மிடம் இருக்க வேண் டும். உங்களுடைய ஆவிக்குரிய வளர் ச்சியின் பாதையில், தேவனுடைய வார் த்தைக்கு கீழ்ப்படிந்து, கடைசியாக நீங் கள் எடுத்த தீர்மானம் என்ன? அதை எப்போது எடுத்தீர்கள்? பல ஆண்டுக ளாக அப்படியான தீர்மானங்கள் ஒன் றும் எடுக்கவில்லை என்றால், உங்கள் வாழ்க்கையை நன்கு ஆரா ய்ந்து பார்ப்பது உங்களுக்கு நன்மையைத் தரும். எடுத்துக்காட்டாக, மற்றவர்களுடைய குறைகளை பற்றி பேசும் பழக்கம் உள்ளவரின் இருதயத்திலே குறைகளை குறித்த வாஞ்சை இருக்கும். அதனால் தான் அப்படிப்பட்டவர்கள் மற்றவர்களின் குறைகளிலே அதிக நாட்ட முள்ளவர்களாக இருக்கின்றார்கள். இனி நான் சகோதரருக்கு விரோத மாக பேசப் போவதில்லை, மற்றவர்களின் குறைவு நிறைவாக வேண் டும் என்று நேரம் எடுத்து ஜெபிக்கப் போகின்றேன். இப்படியான தீர்மா னம் எங்கள் உள்ளான மனிதனின் புதிதாக்குதலுக்கு நன்மையானது. பல செயற்திட்டங்களை செய்து வருகின்றேன், வறியோருக்கு உதவுகின் றேன், சபைக்கு சென்று வருகின்றேன் ஆனால் கடைசியாக உள்ளான மனிதனுக்குரிய புதிதாக்குதலை குறித்ததான தீர்மானத்தை எப்போது எடுத்தேன் என்பது தெரியாது என்போமாகில், நாங்கள் அதைக்குறி த்த ஆசை அற்றவர்களாக இருக்கின்றோம் என்பதையே குறிக்கின்றது.

ஜெபம்:

பரிசுத்த பிதாவே, அடைந்தாயிற்று, தேறினவனானேன், என்று பெருமை கொள்ளாமல், இன்னும் பரிசுத்தமாகும்படிக்காய் உணர்வுள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:16