புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 05, 2019)

இதய வாஞ்சைகள்

நீதிமொழிகள் 4:23

எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.


மனிதனின் இதயத்திலே ஆயிரம் எண்ணங்கள் உதிக்கும் என ஒரு பக்தன் பாடினான். “இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். நல்ல மனு~ன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக் கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்.” இன்று எங்கள் இருதயங்கள் என்னத்தினால் நிறைந்திருக்கின்றது என சற்று ஆரா ய்ந்து பார்ப்போம். ஒவ்வொரு மனித னுடைய இருதயத்திலும், அவன் வாஞ் சிக்கின்ற காரியங்கள் குடி கொண்டி ருக்கும். உதாரணமாக, நாளை தன் பிறந்த நாளைக் கொண்டாடவிருக்கும் சிறுமியின் இருதயத்தில், தன்னுடைய பிறந்த நாள் கொண்டாட்டத்தை குறி த்த பரபரப்பு நிறைந்திருக்கும். முதல் தடவையாக, வேலைக்கு செல்லும் வாலிபனின் இதயத்தில் அதைக் குறித்த எண்ணம் இருந்து கொண் டிருக்கும். மதுபானத்தை பருகி, அதை வாஞ்சிக்கின்றவர்களின் இரு தயம், மாதுபானம் அருந்தும் அடுத்த சந்தர்ப்பத்தை நோக்கி காத்திரு க்கும். தேவனைத் துதிக்க வாஞ்சையுள்ளவனின் இருதயம் துதியின் வேளையை எதிர்பார்த்துப் பரவசம் அடையும். குறைகளை நோக்கு கின்றவனின் இருதயத்தில் மற்றவர்களின் குறைவுகள் அதிகதிகமாக தெரியும். ஒருவரும் கெட்டுப் போகாமல், யாவரும் பரலோகம் செல்ல வேண்டும் என்ற வாஞ்சையுள்ளவனின் இருதயத்தில் ஆத்தும பாரம் இருக்கும். இப்படியாக நாம் பட்டியல் படுத்திக் கொண்டே போகலாம். எங்கள் இருதயங்கள் எதனால் நிறைந்திருக்கின்றது? எதை வாஞ்சிக்கின்றது? என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்க ளின் மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது. என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது. என்று சங்கீதக்காரன் பாடினார். ஏனெனில், அவருடைய இருதயம் தேவ சமுகத்தைக் குறித்து எப்போதும் தாகமாயிருந்தது. எங்களு டைய இருதயத்தின் தியானங்கள் தேவனைக் குறித்ததான ஆசையாக இருக்க வேண்டும். மாம்சத்தின் சிந்தைகளுக்கு இடம் கொடுப்போமெ ன்றால், அந்த இருதயம் தேவனுக்கு பிரியமாக இருக்காது.

ஜெபம்:

உள்ளந்திரியங்களை ஆராய்ந்து அறிகின்ற தேவனே, என் இதயத்திலே உமக்கு பிரியமில்லாத மாம்ச சிந்தைகள் குடி கொள் ளாதபடி, இதயத்தைக் காத்துக் கொள்ள என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 84:2