புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 02, 2019)

கர்த்தர் ஒருவரே நீதிபரர்

யாக்கோபு 4:12

நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒரு வரே, அவரே இரட்சிக்க வும் அழிக்கவும் வல்ல வர்; மற்றவனைக் குற்றப் படுத்துகிறதற்கு நீ யார்?


யோபு என்னும் பக்தனுடைய வாழ்வில் நடந்த சம்பவத்தை நாங்கள் அறிந்திருக்கின்றோம். அவனுக்கு உண்டாயிருந்த உலக ஐசுவரியம் யாவும் அவனைவிட்டு எடுக்கப்பட்டது. அவன் சரீரம் முழுவதும் பருக் களால் நிறைந்திருந்தது. அவனுக்கு ஆதரவு ஏதும் இருக்கவில்லை. ஆனாலும் அவன் தேவனை பற்றும் விசுவாசத்தில் தளராதிருந்தான். இறுதியிலே, தேவன் தாமே, அவனை இரண்டு மடங்காக ஆசீர்வதித்தார். இன்று எங்கள் மத்தியில், உடன் சகோ தரர் ஒருவருக்கு, யோபுவுக்கு ஏற்பட்ட அழிவைப் போன்ற நிலைமை உண்டா னால் அதை குறித்து என்ன கூறு வோம்? அவன் பாவம் செய்திருக்கி ன்றான் என்று கூறுவோமா? அல்லது அவன் பரிசுத்தவான் என்று கூறு வோமா? அல்லது இவனுடைய பரம் பரை சாபம் இவனைத் தொடருகின் றது என்று கூறுவோமா? சற்று சிந்தித் துப் பாருங்கள். தேவ மனிதனாகிய பவுல், இன்று கிறிஸ்தவர்கள் மத் தியிலே, பெரும் கனத்தை பெற்றிருக்கின்றார். ஆனால், அன்று அவர் தேவனை அறியாதவர்கள் மத்தியிலே, மீட்பின் நற்செய்தியின் நிமித்தம், பலதரம் அடிக்கப்பட்டு, கல்லெறியப்பட்டு, சிறையிலே போடப்பட்டிரு ந்தார். அவர் சிறையிலிருந்து எழுதிய நிருபங்களை நாங்கள் இன்று மேன்மையாக எண்ணிக் கொள்கின்றோம். இன்று எங்கள் உடன் சகோ தரர்களில் ஒருவர் நற்செய்தியின் நிமித்தம் சிறையிலிடப்பட்டால், அவரை ஏற்றுக் கொள்ளுவோமா? அல்லது ஞானமில்லாமல் நடந்து கொண்டான் என்று கூறுவோமா? பிரியமானவர்களே, நாங்கள் ஒரு சம் பவத்தைக் குறித்து விமர்சிக்கலாம், அதற்கு யாரும் தடை போடப் போ வதில்லை. அல்லது ஒரு காரியத்தைக் குறித்து, தீர்க்கமான முடிவை எங்கள் மனதில் வைத்திருக்கலாம். ஆனால், தேவனுடைய முடிவே முடிவு. அவருடைய வசனமே ஜீவன். அவருடைய நீதியே நீதி. அவரே நீதியுள்ள நியாயாதிபதி. எனவே, எங்களைச் சூழ நடக்கின்ற சம்பவங்களைக் குறித்து விமர்சிப்பதிலும், மனதில் நிர்ணயம் செய்வ தைக் குறித்தும் எச்சரிக்கையாயிருப்போம். நாங்கள் நிற்பதும் நிர்மூல மாகாதிருப்பதும் தேவனுடைய கிருபையே. நாளை எங்கள் கரத்தில் இல்லை. எனவே கிருபையின் நாட்களை பிரயோஜனப்படுத்துவோம்.

ஜெபம்:

நீதியின் தேவனே, நீர் ஒருவரே நீதிபரர். மற்றவர்களை குற்றப்படுத்தாமல் வாழும்படியும் உம்முடைய ஆளுகையை நான் அறிந்து கொள்ளும்படியுமான ஞானத்தை எனக்குத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:1-5

Category Tags: