புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 01, 2019)

வளர்ந்து பெருகுங்கள்

2 பேதுரு 3:18

நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்.


பாடசாலைக்கு செல்லும் சிறார்களிடம், தங்கள் தாய் அல்லது தந் தையாரைப் பற்றி சில வார்த்தைகள் எழுதும்படி சொன்னால், அவர் கள் தங்கள் வயதின் அறிவுக்கு எட்டியபடி, தங்கள் உள்ளத்தில் உள் ளதை எழுதுவார்கள். குறிப்பாக கையளவு எண்ணிக்கை உள்ள சிறா ர்கள் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும், பொதுவாக, அந்த மழ லைச் செல்வங்களுக்கு, தங்கள் பெற் றோர் படும் பிரயாசத்தின் ஒரு துளி யையே அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். சில வேளைகளிலே, ஏன் பெற்றோர் இப்படி நடந்து கொள்கின் றார்கள் என்பதை, சின்ன வயதிலே, அவர்களால் உணர்ந்து கொள்ள முடி யாது. ஆனால் காலங்கள் கடந்து செல் லச் செல்ல, வாழ்க்கையின் அனுபவம் பெருகும் போது, வாழ்க்கை என்ன என் பதையும், தங்கள் பெற்றோரின் பிரயா சங்களைக் குறித்த அறிவும், நன்றியும் அவர்களிடம் பெருகுகின்றது. அவர்கள் வளர்ந்து ஒரு கட்டத்திலே தாங்களும் பெற்றோராக மாறுகி ன்றார்கள். இதற்கொத்ததாகவே எங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் வளர்ச்சியும் இருக்கின்றது. தேவனைப் பற்றிய அறிவில் முற்றாக ஒருவரும் வளர்ந்து தேறுவதற்கு ஆண்டுகள் போதாது. அவருடைய அன்பின் அகல, ஆழ, உயரம், மனித அறிவினால் கிரகிக்க முடி யாதது. அந்த அன்பின் சுவை ஒரு தனி ரக அனுபவம். அதை வர் ணிப்பதற்கு மனிதனுடைய அறிவும் மொழியும் போதாது. தேவனை அறிந்த ஆரம்ப நாட்களிலிருந்து அவரை அறியும் அறிவில் நாங்கள் வள ர்ந்து பெருகும் போது, தேவனுடைய அநாதி தீர்மானத்தை உணர்ந்து கொள்கின்றோம். தேவனை அறிகின்ற அறிவில், உண்மையாக, பல ஆண்டுகளாக வளர்ந்து வருகின்ற மனிதன், தேவனை ஏற்றுக்கொண்ட புதிய சகோதரரின் நிலையை நன்றாக உணர்ந்து நீடிய பொறுமை யோடும், சாந்தத்தோடும், அன்பு நிறைந்த சிட்சையோடும் அவர் களை வழிநடத்துவான். எனவே நாங்கள் கர்த்தரை அறிகின்ற அறி வில் வளர்ந்து வரும்போது, அவரைப் போல நாங்களும் மாற்றமடை கின்றோம். அப்படி அவரைப் போல மாறும் போது, அதன் அறிகுறி யாக, அவருடைய திவ்விய சுபாவங்கள் எங்களிலிருந்து வெளிப்பட வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, உம்மை அறிகின்ற அறிவில் வளர்ந்து, உம்முடைய திவ்விய சுபாவங்கள் என்னில் வெளிப்படும் படியாய் எனக்கு அருள் புரிவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 பேதுரு 1:4