புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 30, 2019)

ஒருவரும் கெட்டுப்போகாமல்...

எசேக்கியேல் 33:11

நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்;


எங்கள் இதயத்திற்கு பிரியமான எங்கள் பிள்ளைகளில் ஒருவர் அல் லது நாங்கள் நேசிக்கும் ஒருவர் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால் நாங்;கள் என்ன செய்வோம்;? எங்கள் மனம் எவ்வளவாய் அவர்களு க்காக பதபதைக்கும்? அவர்களை விடுவிக்கக் கூடுமானால், அவர் களை நிச்சயமாக விடுவிக்க முயற்சி செய்வோம். நாங்கள் ஒரு குற்றத்தில் அகப்படும் போது, அதி லிருந்து விடுதலையடைய யாரும் எங் களுக்கு ஆதரவாக இருக்க மாட்டா ர்களா என்று நாங்கள் ஏங்குவதி ல்லையா? பல முறை எச்சரித்தும் கடிந்து கொள்ளப்பட்டும் தன் பிட ரியை கடினப்படுத்தும் மனிதன், தன க்கு தானே குழி வெட்டுகின்றவனாக இருக்கின்றான். ஆனால் அவன் ஆத் துமா அநியாயமாக அழிந்து போவதை தேவன் விரும்புவதில்லை. துன்மார் க்கர் தம்; துன்மார்க்கத்தில் மரிப்பதில் தேவன் பிரியப்படுகின்றவர் அல்ல. சவுல் ராஜா, தாவீது என்றும் மனிதனை கொலை செய்யும்படி பல முறை எத்தனித்தான். அவன் செல்லும் இடமெல்லாம் படைகளோடு பின்தொடர்ந்தான். காலம் நிறைவேறிய போது, சவுல் ராஜா அந்நிய நாட்டு படைகளால் கொன்று போடப்ப ட்டான். அதை தாவீது கேள்விப்பட்ட போது, சவுல் ராஜாவிற்காக புல ம்பினான். சில வேளைகளிலே எம்மை சூழ உள்ள மனிதர்கள் செய் யும் குற்றங்கள், எங்கள் அதிகாரத்திற்கு மேற்பட்டதாக இருக்கலாம். செய்த குற்றத்திற்கு நாட்டு சட்டப்படி தக்க தண்டனை வழங்கப்ப டலாம். எனினும், எந்த ஒரு ஆத்துமாவும் பாதாளத்திற்கு போவதை நாங்கள் விரும்பக்கூடாது. சில மனிதர்கள், செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையை அனுபவிக்கின்றார்கள். அந்த நிலையிலும் அவர்கள் மனந்திரும்பி இயேசுவிடம் திரும்பும்படியான சந்தர்ப்பம் அவர்களுக்கு உண்டு. ஒரு வேளை இந்த பூமியின் வாழ்வு சிறை வாழ்க்கையிலே முடிந்தாலும், மனந்திரும்பிய ஆத்துமாவை பரலோ கில் சேர்க்க தேவன் இரக்கம் நிறைந்தவராக இருக்கின்றார். ஒரு வரும் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடைய வேண்டும் என்ற கிறிஸ்துவின் சிந்தையைத் நாம் தரித்தவர்களாய் இருக்க வேண்டும்.

ஜெபம்:

பரலோக தேவனே, இந்த உலகிலே, அழிந்து போகின்ற ஆத்து மாக்களுக்காக தினமும் ஊக்கமாக ஜெபிக்கும்படியான உணர்வுள்ள இருதயத்தை தந்து என்னை வழிடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 3:16