புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 29, 2019)

இயேசுவின் பிரதிநிதிகள்

1 கொரிந்தியர் 3:13

அவனவனுடைய வே லைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங் கப்பண்ணும்.


அரச பணிப்புரையுடன், அரசனுடைய முத்திரையைத் தரித்தவனாய், அரச அலுவல்களாக செல்லும் ஊழியனின் செயல்பாடுகள் அந்த அர சனுடைய பெயருக்கு கனத்தை அல்லது கனவீனத்தை கொடுக்கும். இப்படியாக, அரச பணிப்புரையுடன், ஒரு கிராமத்திற்கு சென்ற அதி காரி ஒருவன், அரச கட்டளைக்கு விரோதமாக, ஜனங்களை துன்புறு த்தி, அநியாயமாக வரி நிலுவைகளை ஜனங்கள் மேல திணித்தான். அந்த அதி காரியின் செயல்களினாலே, அந்த அர சனின் பெயர் மக்கள் மத்தியிலே தூசி க்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பின் இந்த செய்தி அரசனின் செவிகளை எட்டியது. அந்த அரசனுடைய கோபம் தன் அதிகாரியின் மேல் மூண்டதால், அவனுக்குரிய கடும் தண்டனையை வழ ங்கினான். பிரியமானவர்களே, இங்கு ஊழியர்கள் என்று குறிப்பிடப்படும் போது, உங்கள் சபையிலுள்ள போதகர்கள், மூப்பர்கள், உதவி ஊழியர்களை மாத்திரம் கருத்தில் கொள்ள வேண்டாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விலை மதிக் கமுடியாத தூய இரத்தத்தினாலே மீட்கப்பட்ட நாங்கள் யாவரும், அவ ருடைய நாமத்தை எங்கள் மேல் தரித்திருக்கின்றோம். எங்களுடைய கிரியைகள் ஒவ்வொன்றும், அவருடைய நாமத்திற்கு கனத்தை அல் லது கனவீனத்தை கொண்டு வரலாம். எங்களுடைய கிரியைகள் அநீ தியாக இருக்கும் போது, அக்கிரியைகளினாலே, தேவனுடைய நாமம் மக்கள் மத்தியிலே தூ~pக்கப்படும். இப்படியாக, தேவ நாமம் தரிக் கப்பட்ட ஜனங்கள், பல தரம் எச்சரிக்கப்பட்டும், தங்கள் பொல்லாத வழிகளைவிட்டு திரும்ப மனதில்லாமல், தொடர்ச்சியாக அநீதியை நடப்பிக்கும் போது, அவர்கள் முடிவு பரிதாபமாக இருக்கும் என பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. நியாயத்தீர்ப்பு கிறிஸ்துவுக்குரியது. அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும் நாள் சமீபித்துக் கொண் டிருக்கின்றபடியால், பயபக்தியுடன், தேவனுடைய நாமம் தரிக் கப்ப ட்டவர்களாகிய எங்களின் கிரியைகள், பிதாவாகிய தேவனுடைய நாம த்திற்கு மகிமையையும் கனத்தையும் கொண்டுவர வேண்டும். மற் றவர்களுடைய துணிகரமான செயல்களை கண்டு சோர்ந்து இளைப் படைந்து போகாமல், தேவன் தரும் பெலத்தினால் வேதம் கூறும் நற்கிரியைகளை ஓயாமல் நடப்பிப்போம்.

ஜெபம்:

மகிமை நிறைந்த தேவனே, உம்முடைய நாமத்தின் மகிமையை சொல்லி வரும் ஜனங்களாக எங்களை அழைத்தீர். அதற்கு பாத்திரராக நாங்கள் நடக்கும்படி எங்களை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 4:13