புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 27, 2019)

காலங்கள் கர்த்தருடைய கரத்தில்

சங்கீதம் 113:7

அவர் சிறியவனைப் புழு தியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த செல்வாக்கு நிறைந்த இளம் குடும் பத்தினர் தங்கள் மகனை மிகவும் கரிசனையுடன் கவனமாக வளர்த்து வந்தார்கள். தெருவின் மறுபக்கத்திலே வாழ்ந்த ஏழைக் குடும்பத் தினர், குடும்ப பொருளாதார நெருக்கடி காரணமாக தாயும் தந்தையும் நாளாந்த வேலைக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆதலால், அவர்களு டைய மகன் பல குறும்பு செயல் களை செய்து வந்தான். செல்வாக்கு நிறைந்த பெற்றோர், எப்போதும் குறு ம்பு செய்யும் சிறுவனை கடிந்து கொண்டு, பெற்றோர் இப்படியாகவா பிள்ளைகளை வளர்ப்பது என்று அவ ர்களுடைய பிள்ளை வளர்ப்பை குறி த்து விமர்சித்து வந்தார்கள். தங்களு டைய மகனின் ஒழுக்கத்தைக் குறித்து மிகவும் பெருமிதமாக பேசிக் கொண் டார்கள். ஆண்டுகள் கடந்து சென்று வாலிப பருவத்தை அடைந்த அந்த சிறார்களில், ஏழைப் பெற்றோரின் பிள்ளை தன்னை வளர்க்க பெற்றோர் படும் பாடுகளை உணர்ந்து, பொறுப்புள்ள வாலிபனாக மாறிவிட்டான். ஆனால், செல்வாக்குள்ள மற்ற வாலிபன், தன் வயதிற் கொத்த மற்ற வாலிபர்களோடு, பெற்றோரின் செல்வத்தை து~;பிர யோகம் செய்து வந்தான். இதனால் அவன் பெற்றோருக்கு; அதிக துன்பத்தைக் கொடுத்தான். பிரியமானவர்களே, மற்றவர்களின் நிலையை உணராது அவர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் நியாயந்தீர்க்க முற்படாதிருங்கள். காலம் எங்களுடைய கையில் இல்லை. இன்று எங்கள் வாழ்வு வசதியாக இருக்குமாயின், அது தேவனுடைய ஈவு என்பதை உணர்ந்து தேவனுக்கு நன்றியை செலு த்துங்கள். உங்களால் முடிந்த அளவிற்கு, தேவையோடு உள்ளவர்க ளுக்கு பொருளாதார உதவியை வழங்குங்கள். அவர்களுக்காக கருத் தோடு ஜெபியுங்கள். இன்று எங்களுடைய பிள்ளைகள் ஒழுக்கமாக இருந்தால், அது தேவனுடைய கிருபை. மற்றவர்களுடைய பிள்ளை களும் உங்கள் பிள்ளைகளைப் போல ஒழுக்கமாக இருக்க வேண் டும் என்று தேவனை வேண்டிக் கொள்ளுங்கள். எங்களுடைய சந்ததி யின் எதிர்காலம் தேவனுடைய கரத்திலிருக்கின்றது. அவரே எல்லா ஆசீர்வாதத்தின் ஊற்றாக இருக்கின்றார்.

ஜெபம்:

அன்புள்ள ஆண்டவரே, நீர் எனக்கு தந்த கிருபையின் நாட்களிலே மற்றவர்களையும், மற்றவர்களின் பிள்ளைகளையும் நியாந்தீர்க்காமல், யாவருக்காகவும் வேண்டுதல் செய்யும் உள்ளத்தைத் தாரும்.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - புலம்பல் 3:22