புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 24, 2019)

நீதிமானின் நடைகள்

நீதி 23:31-32

மதுபானம் இரத்தவருண மாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன் றும் போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடி க்கும், விரியனைப்போல் தீண்டும்


கர்த்தர் நீதிமானின் நடைகளை வாய்க்கப் பண்ணுகின்றார். கர்த்தர் கற்பித்த வழியில் அவன் நடக்கும் போது, அவன் தனக்கும், தனக்கு பின்வரும் சந்ததிக்கும் பெரும் ஆசீர்வாதத்தை உண்டு பண்ணு கின்றான். ஆனால், அவன் தன் நடைகள் பிசகி, தன் சொந்த அறி வில் கிரியைகளை நடப்பிக்கும் போது, அவன் பெலவீனன் ஆகி விடுகின்றான். அந்த வேளையிலே அவன் தவறான தீர்மானங்களை எடுப் பதால், அது அவனுக்கும், அவனுக்குப் பின்வரும் சந்ததிகளுக்கும் பெரும் பாதகத்தை ஏற்படுத்தி விடுகின்றது. நோவா என்னும் நீதிமான், கர்த்தருக்கு பிரியமானவன். அன்றைய உலகிலே வாழ்ந்த ஜனங்களுக்குள் அவனுடைய குடும்பம் மாத்திரமே பெரு வெள்ள த்தில் இருந்து காக்கப்பட்டார்கள். அதன் பின்பு, நோவா பயிரிடுகிறவ னாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டி னான். அவன் திராட்சரசத்தைக் குடி த்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். வெறிகொள்வது நீதிமானுக்கு தகுதியானதல்ல. இப்படியாக நோவா, தன் நடையிலிருந்து பிசகினதின் விளைவாக, அவன் தன் சந்ததியின் ஒரு பகுதியை அவன் சபிக்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்து பல பின்விளைவுகள் ஏற்பட்டது. நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் எழுந்திரு ப்பான் என்ற பிரகாரம் நோவா தன் தவறை உணர்ந்து தன் நடையை சீர்படுத்தியிருக்கலாம், ஆனால் அவனுடைய தவறான நடத்தையி னால், பலர் சந்ததி, சந்ததியாக துன்பப்பட்டார்கள். எனவே, கிறிஸ்து வழியாக நீதிமானாக்கப்பட்டிருக்கின்ற நாங்கள், மதுபானத்தை நாடித் தேடக் கூடாது. மதுபானம் அருந்துவதற்கு வேத வசனங்களை தேடுகி ன்றவன், தன் வாழ்க்கைக்கு தானே படுகுழி வெட்டுகின்றதற்கு திட் டம் தீட்டுகின்ற மனிதனுக்கு ஒப்பாயிருக்கின்றான். வெறித்தவனு டைய கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறான வைகளைப் பேசும். வெறிகொள்ளுதல் நீதிமானுக்கு தகுதியானதல்ல. வெறிகொள்ளுதல் மட்டுமல்ல, தேவனுடைய கட்டளைகளுக்கு விரோ தமான எந்தச் செய்கையும் பல பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

ஜெபம்:

அன்பின் தேவனே, என் மாம்சத்தின் ஆசை இச்சைகளுக்கு இடங் கொடுத்து, பெரும் பாதகங்களை உண்டு பண்ணிவிடாமல், உம்முடைய வார்த்தையின்படி வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 5:11