புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 23, 2019)

மேன்மையான பதவி

சங்கீதம் 37:30-31

நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியா யத்தைப் பேசும். அவ னுடைய தேவன் அரு ளிய வேதம் அவன் இரு தயத்தில் இருக்கிறது. அவன் நடைகளில் ஒன் றும் பிசகுவதில்லை.


உங்கள் ஊரிலுள்ள நீதவான் ஒருவர், அநீதியான தீர்ப்புக்களை வழங்கினால் அவரைக் குறித்து நீங்கள் என்ன சொல்வீர்கள்? அந்த ஊரிலே துன்மார்க்கம் அதிகரிக்கும். உங்களையும், உங்களில் மனத் தாங்களோடு இருக்கும் பழைய நண்பனையும் ஒப்புரவாக்கும்படி நிய மிக்கப்பட்ட ஒரு மனிதனானவன், துரோகம் செய்தால், மனிதர்களுக்கு இடையில் பகையானது மேலும் அதிக ரிக்கும். இப்படியாக தங்கள் பொறுப்பு க்களில் தவறும் எந்த உத்தியோகஸ்த ரையும் குறித்து மற்றய மனிதர்கள் நல்ல அபிப்பிராயம் வைத்திருக்க மாட் டார்கள். பிதாவாகிய தேவன் தாமே, தம்முடைய பிள்ளைகளாகிய எங்களு க்கு “நீதிமான்” என்ற பெயரைக் தந்தி ருக்கின்றார். இது ஒரு கற்பனைக் கதை அல்ல. ஆம் பிரியமானவர்களே, நித்திய ஆக்கினைக்கு நியமிக்கப்படி ருந்த தகுதியில்லாத எங்களை, தம்மு டைய திருக் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தத்தினாலே, பாவமறக் கழுவி, எங்களுக்கு நீதிமான் என்ற பெயரைச் சூட்டினார். இந்த உலகத்தின் நியதியின்படி நீதிமானாக இருக்கும்படிக்கு அல்லாமல், இயேசு கிறிஸ்து இந்த உலகத்திலே வாழ்ந்து காட்டியதைப் போல, நாமும் நீதிமானாக வாழ வேண்டும். பாவிகளை நியாயந் தீர்க்கும்படிய ல்ல, அவர்கள் பாவத்திலிருந்து விடுதலையாகும் வழியை காண்பிக்கு ம்படியாய் எங்களை நீதிமானாக்கினார். சமாதானத்தை குலைக்கும்படி யல்ல, பகையை ஒழித்து, ஒப்புரவாக்கும்படிக்கே நீதிமானாக்கினார். எனவே நாங்கள் நீதிமானின் குணாதிசயங்களிலிருந்து தவறுவோமாக இருந்தால் எங்களால் மற்றவர்களுடைய வாழ்விற்கு பாதிப்புக்கள் அதிகமாக இருக்கும். “இத்தனை மகத்துவமுள்ள பதவியை இந்த ஏழைகள் எங்களுக்கு” என்று ஒரு அழகான பாடலின் வரிகள் அமை க்கப்பட்டிருக்கின்றது. எனவே பெற்ற பதவியின் மேன்மைய உணர்ந் தவர்களாக, எங்கள் நிமித்தம் பிதாவாகிய தேவனின் நாமம் மகிமை ப்படும்படி தேவ நீதியின் கிரியைகளை நடப்பிப்போம்.

ஜெபம்:

நீதியின் தேவனே, நீர் எனக்கு தந்த மகத்துவமுள்ள பதவியின் மேன்மையை உணர்ந்து, நீதிமானுக்குரிய கிரியைகளை நடப்பிக்கும்படி எனக்கு பெலன் தந்து வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கி றேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 26:7