புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 20, 2019)

தீர்ப்பிடாதிருங்கள்

ரோமர் 2:1

ஆகையால், மற்றவர்க ளைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரா னாலும் சரி, போக்குச் சொல்ல உனக்கு இடமி ல்லை;


நோயுற்றிருந்த மனிதன் ஒருவனை கண்ட அயலவன், இவன் ஏதோ பாவம் செய்திருக்க வேண்டும் இதனால் தேவன் இவனை தண்டிக்கி ன்றார் என்று கூறினான். இப்படிப்பட்ட அறிக்கைகளை, மனிதர்கள் கூறுவதை நாங்கள் அவ்வப்போது கேள்விப்படுவதுண்டு. இயேசு ஒரு சமயம் இவ்வாறு கூறினார்: சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதி னெட்டுப்பேரைக் கொன்றதே, எருசலே மில் குடியிருக்கிற மனுஷரெல்லாரி லும் அவர்கள் குற்றவாளிகளாயிருந் தார்களென்று நினைக்கிறீர்களா? அப்ப டியல்லவென்று உங்களுக்குச் சொல் லுகிறேன், நீங்கள் மனந்திரும்பாமற் போனால் எல்லாரும் அப்படியே கெட் டுப்போவீர்கள் என்றார். வழியோர மாக இருந்த பிறவிக் குருடனைக் கண்ட சீ~ர்கள், இயேசுவை நோக்கி: இவன் குருடனாய் இருப்பது, இவன் செய்த பாவமோ அல்லது இவன் பெற்றோர் செய்த பாவமோ என்று கேட்டார்கள். அதற்கு இயேசு: இவன் செய்த பாவமுமல்ல, இவன் பெற்றோர் செய்த பாவமுமல்ல, தேவனுடைய நாமம் மகிமைப்ப டும்படியாக இவ்வண்ணமாக இருக்கின்றான் என்று கூறினார். இந்த உலகிலே, கர்த்தரை அறிந்து அவர் வழிகளில் நடக்கின்ற சில தேவ பிள்ளைகள் கூட கடும் நோய்கள், உபத்திரவங்கள், வியாகுலங்கள், துன்பங்கள், பசி, நிர்வாணம், நாசமோசங்கள், பட்டயங்கள் போன்றவ ற்றிலும் சிரத்தையுடன் தேவ ஊழியங்களை செய்து வருகின்றார்கள். அது மட்டுமல்ல, இன்றும் தேவ பிள்ளைகள் வாலவயதிலும், தங்கள் உயிரைத் தியாகம் செய்து, பலர் முன்னிலையில், இரத்த சாட்சிக ளாக மரிக்கின்றார்கள். இவர்களுக்கு ஏன் இப்படி சம்பவிக்கின்றது என மற்றவனை நியாயந் தீர்ப்பது எங்களுக்குரியதல்ல. அப்படி நியா யந்தீர்ப்பதினால், எங்கள் மாம்ச இச்சசையை நாங்கள் நிறைவேற்று வோமே தவிர, அதனால் வேறு எந்த நல்ல மாற்றங்களும் எங்களு க்கோ அல்லது மற்றவர்களுக்கோ வரப்போவதில்லை. அப்படி நாங் கள் எங்கள் இ~;டப்படி, எங்கள் மனத்திருப்த்திக்காக தகாதவை களை பேசும் போது, நாங்கள் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்கின்றவர்களாக இருப்போம்.

ஜெபம்:

அன்புள்ள பரலோக தந்தையே, மற்றவர்களின் வாழ்வில் நட க்கும் விடயங்களையே உற்று நோக்கி அவர்களுக்கு விரோதமாக பேசாமல், என் வாயின் வார்த்தைகள் உமக்கு முன்பாக பிரியமாயிருக்கட்டும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 3:9