புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 19, 2019)

நேசிக்கும் தேவன்

வெளி 3:19

நான் நேசிக்கிறவர்களெ வர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக் கிறேன்;


மாலை வேளைகளிலே, கூடி விளையாடும் இளவயதுள்ள வாலிபர் கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு, பலத்த வாக் குவாதமாக மாறிவிட்டது. இருவரும் தகாத வார்த்தைகளை பேசினா ர்கள். அவர்களில் ஒருவன், சீக்கிரமாக மற்றய வாலிபனுடைய தந்தையாரிடம் சென்று, உங்களின் மகன், இப்படியாக தகாத வார்த் தைகளை பேசுகின்றான் என்று கூறி னான். அந்த தந்தையார், மகனிடம், நீ அப்படி ஏதும் வார்த்தைகளை பேசி யது உண்மையா என்று கேட்டார். மகன் மறுமொழியாக: அவன் என்னை வாய் க்கு வந்த மாதிரி தகாத வார்த்தைக ளால் பேசினான். அதனால் நானும் சில வார்த்தைகளைப் பேசினேன் என்று தன் நிலையை நியாயப்படுத்த முயன்றான். தந்தையாரோ தன்னு டைய மகனை கண்டித்து, சில கிழமை களுக்கு உனக்கு விளையா ட்டு இல்லை என்று தண்டனையை வழங்கினார். அதனால் அவன் அயலிலுள்ள வாலிபர்கள் மத்தியில் வெட்கமடைந்தான். என்னுடைய அப்பா எனக்கு இப்படி செய்துவிட்டார் என்று துக்கமடைந்தான். மற்றய வாலிபனோ, சந்தோ~மடைந் தான். அவனை ஏளனம் செய் தான். பல ஆண்டுகளுக்கு பின், அந்த மகன், தன்னுடைய பிள்ளை களுடன் இருக்கும் போது, இந்த சம்ப வத்தை நினைத்துப் பார்த்து, தன்னை தன் தகப்பனானவர் தண்டித்தது மிகவும் நல்லது என்று உணர்ந்து கொண்டான். பிரியமானவர்களே, எங் கள் பரமபிதா, நாங் கள் பரிசுத்த வாழ்வு வாழும்படி எங்களை வேறு பிரித்தார். ஏழைக ளான எங்களுக்கு இது ஒரு மேன்மையான பதவி. எங்களை முடி விலே மகிமை யில் சேர்க்கும்படிக்கு, தற்காலத் திலே சில கடிந்து கொள்ளுதல், தண்டனைகள் (சிட்சை) வழியாக சீர்திருத்தும்போது, பலர் எள்ளி நகையாடலாம். அது எங்களுக்கு மனவேதனையாக இரு க்கலாம். அந்த வேளைகளிலே, நீடிய பொறுமையோடும், நாவடக்கத் தோடும் பரமபிதாவின் பலத்த கைக்குள் அடங்கி இருங்கள். நீங்கள் அவருடைய பிள்ளைகள் என்பதினாலே அவர் உங்களை நல்வழிப்ப டுத்துகின்றார். இப்படியாகவே, தாவீது ராஜா, உடைக்கப்பட்ட நேரங்க ளிலே தேவனுடைய பாதத்திலே இருக்கக் கற்றுக் கொண்டார். தன்னு டைய நிலையை சங்கீதங்கள் வழியாக தேவனுக்கு தெரியப்படுத்தி னார். நீரே என் பங்கு என்று, தேவனை பற்றிக் கொண்டார்.

ஜெபம்:

மனதுருக்கமுள்ள தேவனே, நீர் உடைத்து உருமாற்றுகின்ற தேவன் என்பதை நான் உணர்ந்து, நீர் கடிந்து கொள்ளும் போது சோர்வடைந்து போகாமல் இருக்க உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:44-48