புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 11, 2019)

கால தாமதம் வேண்டாம்

மத்தேயு 3:8

மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.


ஐசுவரியவானும், ஆயக்காரரின் தலைவனுமாகிய சகேயு (வரி வசூலி ப்ப வர்களின் தலைவன்), இயேசுவை சந்தித்த நாளிலே, இயேசுவை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். அவன், தன்னுடைய வாழ்க்கையை மாற்றியமைப்பதற்கு அவன் சற்றும் தாமதிக்கவில்லை. தன் உள்ளத்தில் வந்த மாற்றத்தை (மனந் திரும்புதலை) வெளிக்காட்டு முகமாக நற்கிரியைகளை வெளிக்காட்டினான். அது மட்டுமல்லாமல், அநியாயமான காரியம் ஏதும் தன்னிடத்தில் இருந் தால், அவற்றை சரி செய்யும்படியான மனநிலையுடையவனாக இருந்தான். சகேயுவினுடைய மனந்திரும்பு தலை மையமாக வைத்து, எங்கள் வாழ்க்கையை நாங்கள் ஆராய்ந்து பார்க்க முடியும். அநியாயமான வழிகளில் பணத்தை பெருக்குவது மாத்திரம் அநியாயம் அல்ல. மனிதர்களுடைய சுயநலமாகிய மாம்சத்தின் கிரியைகளினாலே, அவர்களை சூழ உள்ள வேறு பல மனிதர்கள் பாதிப்படைகின்றார்கள, கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள். எங்கள் சொந்த வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும் போது, அநேக வழிகளில், நாங்கள் அறிந்தோ அறியாமலோ பிறருக்கு எதிராக பல அநியாயங்களை செய்திருக்கலாம். அவற்றை உணர்ந்து கொள்ளும் நாளிலே, கால தாமதமின்றி, அவைகளிலிருந்து, மனந்திரும்பி, மனந்திரும்புதலுக்குரிய நற்கிரியைகளை நாங்கள் எங்கள் வாழ்வில் காண்பிக்க வேண்டும். ஒருவன், பிறருக்கிடையில் பிரிவினைகளை உண்டுபண்ணும்படி கோள் சொல்லுகிறவனாயிருந்தால், அவன் அதிலிருந்து மனந்திரும்ப வேண்டும். கர்த்தர் என் பாவத்தை மன்னித்தார் என்று அறிக்கை பண்ணுவதுடன் நிறுத்திவிடாமல், இனி பிறர் மத்தியில் பிரிவினை உண்டாக்கும் கோள் சொல்லும் பழக்க த்தை நிறுத்திவிட வேண்டும். இப்படிப்பட்ட மாம்சத்தின் கிரியையிலி ருந்து மனந்திரும்பி, தன் வாழ்வில் நற்கனிகளை வெளிக்காட்ட விரும் புகின்றவன், தன்னுடைய துர்க்குணத்தினால் பிரிந்து போயிருக்கும் பிறரிடம், மன்னிப்பு கேட்டுக் கொள்ளுவான். இப்படியாக அநியாயமாக தோன்றும் காரியங்களை எங்களை விட்டு அகற்றி விட வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, சுத்த மனச்சாட்சியை தந்தவரே, அநியாயமாக தோன்றுகின்ற காரியங்கள் யாவையும் உடடினயாக விட்டுவிடும்படியான பெலனைத் தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 28:13