புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 10, 2019)

என்னுடைய காரியம் என்ன?

யோவான் 21:19

இயேசு பேதுருவை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார்.


இயேசு இந்த உலகத்தைவிட்டு பரலோகத்திற்கு செல்லும் முன்னதாக, தன்னை பின்பற்றி வரும்படியாக பேதுரு என்னும் சீ~னுக்கு கூறி னார். அவன் கர்த்தரை நோக்கி: யோவான் என்னும் சீஷனுடைய காரியம் என்ன என்று கேட்டான். அதற்கு அவர், அதை குறித்து நீ ஏன் கவலையடைகின்றாய் என்று பொருட்படும்படி கூறி, நீ என்னை பின்பற்றி வா என்றார். இன்றைய நாட்களிலும், தங்களை கல்வி மான்கள் என்று அழைக்கும் பலர்: “காட்டிலுள்ள வேடுவர்களுக்கு யார் நற்செய்தி கூறுவது?” “இயேசுவை அறி யாத சிறுவர்கள் பலர் மரிக்கின்றார் களே, அவர்கள் எங்கே போவார்கள்?” என்று கூறிக் கொள்வதை ஊடகங்; டாக மற்றும் செய்திகள் வழியாகவும் நாங்கள் கேட்கின்றோம். இப்படிப்பட்டவர்கள், தங்கள் வாழ்விலுள்ள, தங்கள் இருதயத்திலுள்ள, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் உள்ள தேவனு க்கு பிரியமில்லாத அநேக காரியங்களிலிருந்து மனந்திரும்புவதற்கு பதி லாக, தங்களுக்கு அப்பாற்பட்ட காரியங்களை குறித்து கரிசனையுள்ள வர்களாக தங்களைக் காண்பித்துக் கொள்கின்றார்கள். இவர்களுடைய பேச்சுக்கு இடங்கொடுத்து, விசுவாசத்திலிருந்து வழுவிப் போய்விடாதி ருங்கள். இப்படிப்பட்ட காரியங்களை பேசுகின்றவர்கள், தேவனு டைய ஆளுகையில் சந்தேகம் உள்ளவர்கள். எனவே தேவனைக் குறி த்த விசுவாசம் அவர்களிடத்தில் இல்லை. இதனால், தங்கள் அவல நிலையை நியாயப்படுத்தும்படி, மற்றவர்கள் பேரில் தாங்கள் கரிச னையுள்ளவர்களாக தங்களை காண்பிக்கின்றார்கள். தேவன் அன்புள்ள வர். அவருடைய வழிகள் அதிசயமானவைகள். அவர் நீதியுள்ள நியாயதிபதி. அவர் சர்வ வல்லமையுள்ளவர். யோவான் ஸ்நானன் என் னும் மனிதன், வாழ்ந்த ஆண்டுகள் கொஞ்சம், அவருடைய சேவை மிகவும் குறுகிய காலம். கர்த்தருக்கென்று வழியை ஆயத்தப்படுத்து ம்படி, அவர் உலககெங்கும் சென்று நற்செய்தி கூறும்படி அழைக்கப் டவில்லை. அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை செய்து முடித்தார். தேவன் எப்படி எங்கள் மேல் கரிசனையுள்ளவராக இருக்கின்றாரோ, அதேபோல மற்றவர்களுடைய விவகாரங்களைக் குறித்தும் கரிசனை யுள்ளவராக இருக்கின்றார். எனவே, தேவனுடைய ஆளுகையை குறித்து சந்தேகப்படாமல், அவர் குறிப்பாக எங்களுக்கு தந்தவைக ளிலே உண்மையாக இருப்போம்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, உம்முடைய ஆளுகையைக் குறித்து எவ்வளவேனும் சந்தேகப்படாமல், என் வாழ்வில் உம் சித்த த்தை மாத்திரம் நிறைவேற்ற என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யூதா 1:14-15