புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 09, 2019)

சபை ஐக்கியம்

ரோமர் 16:27

தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.


ஒரு சமயம், இயேசு எருசலேமுக்குப் போய், தேவாலயத்திலே ஆடு கள் மாடுகள் புறாக்கள் போன்றவற்றை விற்கிறவர்களையும், காசுக் காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, கயிற்றினால் ஒரு சவுக்கை யுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத் துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, புறா விற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டு போங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என் றார். இந்த சம்பவத்தின் வெளிச்சத் திலே, நாங்கள் சபை கூடி வருதலின் நோக்கத்தை ஆராய்ந்து பார்க்க வேண் டும். இன்று ஆலயங்களிலே, நன்மை கள் கருதி, துதி ஆராதனை தவிர, வேறே இதர நிகழ்ச்சிகள், செயற்பா டுகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. அதிகமாக அவைகளின் ஆரம்பம் யாவும் நன்மை கருதியதாகவே இருக்கும். ஆனால், கால ப்போக்கில், அவைகள், கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படையான அம்ச த்தை வலுவிழக்கச் செய்து விடுகின்றது. எங்கள் கிரியைகள் யாவும், பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவை மகிமைப்படுத்த வேண்டும். பரத்திலிருந்து அனுக்கிரகம் செய்யப்பட்ட எந்தக் கிரியையும் பிதா வின் நாமத்தை மகிமைப்படுத்தும். எனவே, பிதா மகிமைப்படாத எந்த செய்கையும் பரலோகத்திலிருந்து வந்தவைகள் அல்ல. முக்கியமாக, எங்கள் சுய கொள்கைகளை, எண்ணங்களை செயற்படுத்துதலைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சில மனிதர்கள், தங்களுடைய கொள்கைகள் நடத்தப்படாதவிடத்து சபைகளிலே கல கங்களை உண்டாக்கிவிடுகின்றார்கள். கலகம் இருக்கும் இடத்தில் ஐக்கியம் என்னும் வார்த்தைக்கு இடமில்லை. எங்களுடைய ஐக்கியம், நாங்கள் முன்னெடுக்கும் கிரியைகள், செயற்பாடுகள் தேவனுக்கு சுக ந்த வாசனையாக இருக்க வேண்டுமானால், அங்கே பிதாவின் சித்தம் நிறைவேற வேண்டும். மாறாக எங்கள் செயற்பாடுகள் ஐக்கியத்தின் பிரதானமான நோக்கத்தை கெடுக்குமாயின், நாங்களும் பிதாவின் வீட்டை வியாபார வீடாக மாற்;றுகின்றவர்களாக இருப்போம்.

ஜெபம்:

எங்களை நேசிக்கின்ற பரலோக தந்தையே, உம்முடைய குமாரன் வழியாக, அன்பு என்றால் என்ன என்று கற்றுத் தந்தீர். என் பாவங்களை நீக்கி புதுவாழ்வு தந்தவரே, தொடர்ந்தும் என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 3:23-24