புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 08, 2019)

ஆராய்ந்து பாருங்கள்...

2 தீமோத்தேயு 3:17

அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.


ஆதியிலிருந்த அன்பை விட்டு நாங்கள் விலகக்கூடாது என்பதைக் குறித்து கடந்த நாளிலே தியானித்தோம். ஆதியிலிருந்த அன்பி லிருந்து நாங்கள் விலகியிருக்கின்றோமா? அல்லது தேவன் கூறும் அன்பு எங்கள் வாழ்க்கையில் இல்லை என்பதை, வேத வசனங்களை மையமாக வைத்து எப்படி எங்களை நாங்கள் ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியும்? ஒரு சில உதாரணங்களைப் பார்ப்போம். இயேசு சொன்னார்: உன் தேவனாகிய கர்த்த ரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத் தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயி ருக்கிற இரண்டாம் கற்பனை என்ன வென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூ ருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூ ருவாயாக என்பதே இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார். எங்கள் வாழ்க்கையிலே பகை, வன்மம், பிரிவினை இவற்றி ற்கு இடம் கொடுத்து, அவைகளை இருதயத்திலே தக்க வைத்திருந் தால் எப்படி முழு இருதயத்தையும் தேவனுக்கு கொடுக்க முடியும்? எங்கள் மனதிலே பாவ சிந்தனையை வைத்துக் கொண்டு எப்படி முழுமனதோடு அன்பு செய்ய முடியும்? உங்கள் சத்துருக்களைச் சிநே கியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்க ளுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். என்று இயேசு சொன்னார். இவைகளை செய்ய மனதில்லாதிருந்தால், எப்படி பிறரை நேசிக்க முடியும்? சபையில் ஒருவன் குற்றம் செய்யும் போது, அவர்களுக்காக ஜெபிக்கின்றீர்களா? அல்லது உங்கள் கொள்கை நிறைவேற வேண்டும் என்று, குற்றம் செய்தவனுடைய ஆத்துமாவை வெறுக்கின்றீர்களா? இயேசுவை இரட் சகராக ஏற்றுக் கொண்ட நாளிலே (ஆதியிலே) அவர் எங்கள் பாவங் களை நினையாமல், அவைகளை மன்னித்துவிட்ட அவருடைய அன்பை மறந்து விட்டீர்களா? எனவே, வேதவாக்கியங்களின் வெளிச்சத்திலே உங்கள் இருதயத்தை நீங்கள் ஆராய்ந்து பார்க்க முடியும்.

ஜெபம்:

பரலோக தேவனே, நீர் என்மேல் கொண்ட நேசத்தை மறந்து, மற்றவர்களை நியாயந்தீர்க்காதபடிக்கு, உம்முடைய மாறாத அன்பின் திவ்விய கிரியைகளை என் வாழ்வில் காண்பிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:44