புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 07, 2019)

ஆதியிலிருந்த அன்பு...

வெளி 2:4

ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன் பேரில் எனக்குக் குறை உண்டு.


ஒரு மனிதன், தன் தாய் தந்தையருக்குரிய கடமைகளை, கண்ணி யமாக செய்து வந்தான். தன்னை ஆளாக்க, தங்கள் வாழ் நாளில் பிரயாசப்பட்ட, தனது வயது சென்ற பெற்றோருக்கு எந்த குறையும் வைக்காமல், தன்னால் முடிந்த அளவு பிரயாசப்பட்டான். எனினும், தன்னுடைய முன்னைய நாட்களை சிந்தித்து பார்க்கும் போது, இன்று தன்னுடைய பெற்றோரின் மேல் உள்ள பாசம் அன்று போல் இன்று இல்லை என்பதை தன் மனதில் உணர்ந்து கொண்டான். பெற்றோருக்கு எந்தக் குறைவும் வைக்காத போதும், அன்பு தணிந்து போயிருப்பதை உணர்ந்த போது மிக வும் மனவருத்தப்பட்டான். இதற்கொத் ததாகவே, தேவனோடு வாழும் வாழ்க் கையும் காலப் போக்கில் மாறிப் போய் விடுகின்றது. பலருடைய வாழ்க்கை யிலே, காலங்கள் கடந்து சென் றாலும், பல நற்கிரியைகள் வாழ்வில் உண்டு, பல காரியங்களில் பிரயாசம் உண்டு, பல சவால்களின் மத்தியிலும் தேவ சேவை செய்யப்பட்டு வருகின் றது. அவர்கள் இளைப்படையாமல் பிரயாசப்படுகின்றார்கள். ஆனாலும், ஆதியில் இருந்த அன்பு இவர்கள் உள்ளத்தில் இல்லை. ஒரு கம்யூ ட்டர் இயந்திரம் எப்படி இயங்கிக் கொண்டு இருக்கின்றதோ, அதே பிரகாரமாக பல மனிதர்களின் கிரியைகளும் ஓயாமல் செய்யப்பட்டு வருகின்ற போது. நற்கிரியைகளினால் நாங்கள் மேன்மை பாராட்டு வோம் என்றால், கிறிஸ்துவை அறியாத மனிதர்களும், வறியவர்கள் மத்தியிலே பல நற்கிரியைகளை செய்து வருகின்றார்கள். ஆதலால், எங்களுடைய மேன்மை நற்கிரியைகளிலும் பிரயாசத்திலும் அல்ல, இயேசுவோடு ஒட்டப்பட்டவர்களாக இருப்பதே எங்களது மேன்மை. தேவனுடைய கற்பனைகளை மனதார கைகொள்ளுகின்றவர்களே தேவனை அன்பு செய்கின்றார்கள். தேவனுடைய கற்பனைகளை நாங்கள் புறம்;பே தள்ளிவிட்டு, நற்கிரியைகளில் பிரயாசப்படுவோமெ ன்றால், நாங்களும் கிறிஸ்துவை அறியாதவர்கள் போல இருப் போம். எனவே, ஆதியிலிருந்த அன்புக்கு நாங்கள் திரும்;ப வேண்டும். தேவ கற்பனைகள், எங்கள் சுபாவமாக மாற வேண்டும். நாங்கள் தேவ கற்பனையை மனதார கைக் கொண்டால், தேவனை மட்டுமல்ல, பிறரையும் உண்மையாக அன்பு செய்வோம்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, இந்த உலகிலே எங்களை அழுத்தும் பாரங்கள் மத்தியிலும், உம்முடைய திவ்விய அன்பின் கருப்பொருளை மறந்துவிடாதபடிக்கு, என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 4:16