புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 06, 2019)

தேவனின் அநாதி தீர்மானம்

எபேசியர் 4:24

மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள் ளுங்கள்.


ஆதியிலே, நம் முதல்பெற்றோராகிய ஆதாம் ஏவாள், தேவனுடைய கட்டளையை மீறி, பிசாசானவனின் வஞ்சகத்திற்கு இடம் கொடுத்ததால், தேவ சாயலை இழந்து பாவிகளானார்கள். ஒரு பரிசுத்த ஜாதியை ஏற்ப டுத்தும்படி உருவாக்கப்பட்டவர்கள் பாவம் செய்ததால், அவர்கள் வழி வந்த மனித குலம் சாபத்திற்குள்ளானது. இழந்து போன தேவ சாயலை மறுபடியும் பெற்றுக் கொள்ள மனித குலத்திற்கு வழி ஏதும் இருக்க வில்லை. ஆனால் பிதாவாகிய தேவன் தாமே, மனிதர் மேல் வைத்த அன்பி னால், தம்முடைய திருக்குமாரனாகிய இயேசுகிறிஸ்துவினூடாக வழியை உண்டுபண்ணினார். மனித குலத்தின் மேல் விழுந்து பாவத்தை தன்மேல் ஏற்றுக் கொண்டு, அந்த பாவத்தின் கறையை பரிகரிக்கும்படிக்கு, தம்மைத் தாமே, ஜீவ பலியாக, சிலுவையிலே ஒப்புக் கொடுத்தார். மரணத்தை வென்று மூன்றாம் நாள் உயிர்த்தெ ழுந்தார். பரலோகம் சென்று பிதாவின் வலது பாரிசத்திலே வீற்றி ருந்து, எங்களுக்காக பரிந்து பேசுகின்றார். தம்முடையவர்களை மறுப டியும் தம்மோடு சேர்த்துக் கொள்ளும்படி, திரும்பவும் வருவார். இவை களை அதிகமாக நினைவு கூரும் இந்த நாட்களிலே, இவையாவ ற்றின் கருப்பொருளை நாங்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். இழந்து போன தேவ சாயலை பெற்றுக் கொள்ளும்படிக்கே, இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்து, இத்தனை பாடுகளையும், அவ மானத்தையும் நிந்தையையும் சகித்தார். அவருக்காக பரிதாபப்படும்படி க்கல்ல, அவருக்காக நாங்கள் அழுது புலம்பும்படிக்கல்ல. மாறாக, எங்கள் சுபாவங்கள் இயேசுவைப் போல மாற வேண்டும். அந்த மாற்றம் குறிக்கப்பட்ட நாட்களுடன் முடிவடைவதில்லை. அந்த மாற்றம் எங்கள் வாழ்க்கையிலும் நிரந்தரமாக இருக்க வேண்டும். எனவே, இந்த நாட்களில் இயேசுவின் பாடுகளை நீங்கள் நினை வுகூரும் போது, உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். எங் கள் சரீரங்களை வருத்துவதால், நாங்கள் பரிசுத்தர்களாகுவதில்லை. ஒறுத்தல்கள், தானதர்மங்கள் நல்லது. ஆனால், தேவனுடைய அநாதி தீர்மானத்தின்படி எங்கள் உள்ளான மனிதன், நாளுக்கு நாள் திவ்விய சுபாவத்தில் வளர்ந்து, மறுரூபமாக்கப்பட வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பிதாவே, உம்முடைய அநாதி தீர்மானம் என்னில் நிறைவேறத்தக்கதாக, இயேசுவைப் போல வாழ்ந்து, தேவ சாயலில் தினமும் வளர்ந்து, நித்திய ஜீவனை சுதந்தரிக்க கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:13-14