புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 05, 2019)

ஏற்றகாலத்தில் அறுப்போம்

பிரசங்கி 3:2

நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு.


பல ஆண்டுகளாக, தேவ அன்பின் நிமித்தம், ஜனங்கள் மத்தியிலே பல நற்கிரியைகளை செய்து வந்த ஒருவன், காலப்போக்கில், வருடா வருடம், தன்னுடைய தயாள குணத்தை சிலர் து~;பிரயோகம் செய்து வருகின்றார்கள் என்பதை அறிந்த போது மனச் சோர்வடைந்து போனான். இப்படியான நிலைக்கு நீங்களும் ஒருவேளை தள்ளப்படலாம் அல்லது தள்ளப்பட்டி ருக்கலாம். இன்று, சற்று இதனை தியானம் செய்வோம். ஆதியிலிருந்து சூரியன் பாகுபாடின்றி மனிதர்கள் மேல் ஒளிவீசி வருகின்றது. நல்லோர் மேலும் தீயோர் மேலும் மழை பொழிகின்றது. இவையாவும் தேவனு டைய ஏற்பாடுகள். தேவனுடைய படைப்புக்கள் யாவும் அதின் ஒழுங்கிலிருக்கின்றது. ஆனால், மனிதர்களோ வேறுபட்ட மனநிலை உடையவர்களாக இருக்கின்றார்கள். உப்பு அதன் சாரத்தை இழந்து போனால், அது ஒன்றுக்கும் உதவாது. அதுபோல நற்கிரியைகளை நடப்பிக்கும் நாங்கள் அவற்றிலிருந்து ஓய்ந்து போகக்கூடாது. பாடசாலையில் பலதரப்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றா ர்கள், எவ்வளவு கற்றாலும், சில மாணவர்கள் தீமையான வழியையே நாடி ஓடுகின்றார்கள். இறுதியிலே அப்படிப்பட்டவர்கள் துன்மார்க் கமான வாழ்க்கையை தெரிந்து கொள்கின்றார்கள். இதனால், பாடசா லைகளை மூடிவிடுதல் சரியாகுமோ? அல்லது ஆசிரியர்கள் நற்பண்பு களை சொல்லிக் கொடுத்தால் சரியாகுமா? இல்லை! நற்பண்புகள் யாவும் கற்பிக்கப்பட வேண்டியவைகளே, ஒருவன் அதை தன் இரு தயத்தில் பதித்து வைத்தால், அதனால் அவன் பலனடைவான். நற்கி ரியைகளை து~;பிரயோகம் செய்பவர்கள், தங்களுக்கு கொடுக்க ப்பட்ட கிருபையின் நாட்களை போக்கடிகின்றார்கள். எல்லாவற்றிற் கும் முடிவு உண்டு. ஒவ்வொன்றிற்கும் ஒரு காலம் உண்டு. நீதியுள்ள நியாயதிபதியாகிய இயேசு கிறிஸ்து வெளிப்படும் நாளில், அவனவன் தனக்குரிய பலனை கண்டடைவான். எனவே, உங்களது வாசனையை இழந்து போகாமல் நற்கிரியைகளை தொடர்ந்தும் நடப்பியுங்கள். மனு~ன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். எனவே, நன் மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக நாம் தளர்ந்துபோ காதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.

ஜெபம்:

நன்மையின் தேவனே, உம்முடைய பிள்ளைகளாக அழைக்க ப்பட்ட நாங்கள், உம்மைபோல சம்பூரணர்களாகும்படி, நன்மை செய்வ தில் ஓய்ந்து போகாதிருக்கும்படி உற்சாகத்தின் ஆவியைத் தாரும். இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலா 6:7-9