புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 03, 2019)

இனி வரும் கனமகிமை

2 கொரிந்தியர் 4:17

அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.


இயேசுவை எங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள முன்பாகவும் நாங்கள் இந்த உலகத்திலேதான் வாழ்ந்து வந்தோம். ஆனால், அந்நாட்களிலே, எங்களுடைய பிரயாணம், நித்திய நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பல போராட்டங்கள் எங்கள் வாழ்வில் இருந்தது. மனதும் மாம்சமும் விரும்பினதை செய்து வந் தோம். எங்கள் இச்சைகளை நிறைவேற்றி வந்தோம். அந்த நாட்கள் “அடி மைத்தனத்தின் நாட்கள்”. இயேசுவை எங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டபின்பும், அவரை முகமுக மாய் மகிமையில் தரிசிக்கும் நாள் வரைக்கும், முன்பு உயிர்வாழ்ந்த இந்த உலகத்திலேயே வாழ்ந்து வருகி ன்றோம். முன்பு வந்த போராட்டங்கள் இப்போதும் எங்களை நோக்கி வருகின்றது. ஆனால், இப்போது எங்கள் மனவிருப்பத்தின்படி போராட்டங்களை அணுகாமலும், எங்கள் மன ஆசையின்படி இச்சைகளை நிறைவேற்றாமலும், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலினாலே, அவைகளில் வெற்றி சிறக்கின்றோம். போரா ட்டங்கள் வரும் போது, நெருக்கங்கள் அதிகமாகும், அவ்வேளைக ளிலே நாங்கள் அடிமைத்தனத்தின் நாட்களை இரை மீட்கக்கூடாது. அதாவது, இஸ்ரவேலர், வனாந்தரத்திலே சவால்கள் வந்தபோது, எப்போதும், நாங்கள் எகிப்தில் இருந்திருக்காலம், ஏன் இங்கே மரிக்க வேண்டும், அங்கே சுவையான உணவு வகைகள் இருந்தது என்று அடிமைத்தனத்தை வாஞ்சித்தார்கள். இனி வரவிருக்கும் மகிமையை எண்ணாமல், தங்களுக்கு வந்த உபத்திரவங்களிலே, தேவனை நோக்கிப் பாராமல், அடிமைத்தனத்தின் நாட்களையே விரும்பினார்கள். தேவன் என்று ஒருவர் இருக்கின்றார் என்பதை குறித்து அவர்கள் கண்டும், அறிந்தும், கேட்டும் உணர்வற்றவர்களாகவே வாழத் தீர்மா னித்தார்கள். அங்கிருந்த மனிதர்களில் பலர் கலகங்களை எழுப்பிவி டுகின்றவர்களாகவே இருந்தார்கள். நாங்கள் அப்படி கலகவீட்டாராக இருக்கக் கூடாது. “இது என்ன வாழ்க்கை, முன்பு போலவே இயே சுவை அறியாமல் வாழ்ந்திருக்கலாமே” என்று அடிமைத்தனத்தை நோக்கிப் ஒரு போதும் பார்க்கக்கூடாது. மாறாக இனிவரும் இணையில்லாத மகிமையை நோக்கி முன்னேறுவோம்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, அடிமைத்தனத்தை நோக்கி பார்த்து, இனிவரவிருக்கும் ஈடு இணையில்லாத மகிமையை இழந்து விடாமல், இயேசுவை நோக்கி முன்னேறும்படி கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:14