புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 01, 2019)

மனதின் பாரங்கள்

ஏசாயா 54:10

மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெய ர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாம லும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலை பெயராமலும் இருக்கும்.


ஒரு வைத்தியரிடம் சென்ற மனிதன், தனக்கு அவ்வப்போது வரும் தலைவலியை குறித்து மிகவும் அலட்டிக் கொண்டான். அந்த தலை வலியானது நின்றால் போதும், அதற்கு மருந்து தாருங்கள் என்றான். ஆனால், அந்த வைத்தியரோ, தயவாக, நீ சுகமாக வாழும்படிக்கு, உன்னுடைய தலைவலியை அல்ல, தலைவலியை உண்டாக்கும் காரணி என்ன என்பதை அறிந்து அதற்கு வைத்தியம் செய்ய வேண் டும் எனக் கூறினார். இன்று எத்தகைய பாரங்கள் உங்கள் வாழ்க்கையை அழு த்துகின்றது? யார் அந்த பாரங்களை உங்கள் இருதயத்திலே ஏற்றினார்கள்? இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தின் அடி மைத்தனத்திற்கு உட்பட்டிருக்கும் போது, அவர்கள் சுமக்கக்கூடாத பார த்தை, எகிப்தின் அதிகாரிகள் அவ ர்கள் மேல் சுமத்தினார்கள். சில வேளைகளிலே, இத்தகைய பாரங்கள், நாங்கள் செய்த குற்றத்தினால் ஏற்ப டாலம். அல்லது காரணமின்றி எங்கள் மேல் சுமத்தப்படலாம். வேறு அநேக பாரங்கள், நாளையைக் குறித்த கவலையினால், நாங்களே எங்கள் மேல் ஏற்றிக் கொண்டவைகளாக இருக்கலாம். ஒரு மனிதன், தன் மேல் சுமத்தப்பட்டிருக்கும் பாரங்களுக்கு, அவனே காரணம் என்று உணர்ந்து கொள்ளும் போது, அவன் உள்ளத்திலே கவலைகள் பெருகுகின்றது. அத்தகைய நேரங்களிலே, “தானே தன் வினையை தேடிக் கொண்டான்” என்று பலரும் கூறிக் கொள்வார்கள். எவை எப்படியாக இருந்தாலும், யார் என்ன சொன்னாலும், இன்று உங் களை அழுத்தும் பாரங்கள் யாவற்றிலுமிருந்து விடுதலை தரும்ப டியாக, வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களை இயேசு அழைக்கின்றார். எனவே உங்களை சுற்றி அழுத்தும் பாரங்களை நோக்கிப் பார்க்காமல், உங்களை அன்போடு அழைக்கும் இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாரு ங்கள். அந்த வைத்தியர் கூறியது போல, எங்கள் சமாதானத்தைக் கெடுக்கும் மூல காரணி என்ன என்பதை அவர் அறிந்திருக்கின்றார். எனவே அவரிடம் வாழ்வை ஒப்புக் கொடுத்து ஜெபம் செய்யுங்கள். வாக்கு மாறாத தேவன், மிகுந்த மனதுருக்கமுள்ளவராயிருக்கின்றார்.

ஜெபம்:

அன்பின் பிதாவே, என் மனதின் பாரங்கள் யாவையும் நீர் அறிந்திருக்கின்றீர். அவைகள் யாவையும் உம்மண்டை இறக்கி வைக்கின்றேன். இன்றிலிருந்து என் மனதை உம் வார்த்தைகளால் நிறைக்கத் தீர்மானிக்கின்றேன். பெலன் ஈந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:28