புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 22, 2019)

கர்த்தருடைய நாளிலே…

மத்தேயு 25:31

அன்றியும் மனுஷகுமா ரன் தமது மகிமைபொரு ந்தினவராய்ச் சகல பரி சுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகி மையுள்ள சிங்காசனத் தின்மேல் வீற்றிருப்பார்.


பிள்ளைகள் வளர்ந்து வரும் போது, ஆரோக்கியமான வாழ்வுக்கான வழிமுறைகளை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் போதனைகள் வழியாக அறிந்து கொள்கின்றார்கள். இந்த உலகத்தில் தீமை இருப்பதால், நன்மை எது என்பதை அறிந்து அதன் வழியில் பிள்ளைகள், மாணவர்கள், விசுவாசிகள் நடப்பதையே அவர்கள் ஆசிக்கின்றார்கள். அதே நேரத்திலே, தீமையின் பாதையை தெரிந்து கொண்டால், வாழ்வில் வரும் பின்விளைவுளைப் பற்றியும் பிள்ளைகளுக்கு அறிவு புகட்டுகி ன்றார்கள். பிள்ளைகள் மதியீனமாக தீமையான வழிகளை தெரிந்து கொண்டு தங்கள் வாழ்க்கையைமாய் த்துவிடாதபடிக்கே அறிவுரை கூறுகின் றார்கள். தேவனாகிய கர்த்தர் தாமே, மோசே என்னும் தன்னுடைய தாசனின் வழியாக, ஆசீர்வாதத்தையும் சாபத்தையும், ஜீவனையும் மரணத்தையும் உங்கள் முன் வைக்கின்றேன், நீங்கள் வாழ்வடையும்படி ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார். தேவனுடைய அனுக்கிரகத்தின்படி கிருபை யின் நாட்களிலே நாங்கள் வாழ்கின்றோம். தேவனுடைய அன்பு, இரக்கம், மனதுருக்கம் பெரியவைகள். ஆனால் நியாயத்தீர்ப்பு என்று ஒரு நாள் உண்டு. அந்த வசனத்தை பேசுவதை பலர் விரும்புவதில்லை. அப்படி ஜனங்கள் நியாயத்தீர்ப்பு என்னும் வார்த்தையை பேசாது இருப்பதினால், அந்த நாள் தள்ளுண்டு போவதில்லை. எனவே, அருமையான கிருபையை பெற்ற நாம், இந்த நாட்களை வீணிலே போக்கடித்தால் அதன் முடிவு என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். கர்த்தராகிய இயேசுதாமே மகிமையான சிங் காசனத்தின் மேல் வீற்றிருப்பதை ஒரு நாள் எங்கள் கண்கள் காணும். அந்த நாட்களிலே, பிதாவினுடைய சித்தம் செய்தவர்களை தம்மிடம் கூட்டிச் சேர்த்துக் கொள்வார்கள். பிதாவின் சித்தம் செய்யாதவர்களை நோக்கி: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினிக்கு போங்கள் என்று கூறுவார். (மத்தேயு 25:41) எனவே இந்நாட்க ளிலே, வழுவிப்போகாமல், தேவ சித்தத்தை செய்து முன்னேறுவோம்.

ஜெபம்:

அன்பின் தேவனே, உம்முடைய நாளைக் குறித்து அசட்டையாக இருக்காதபடிக்கு, எப்போதும் அந்த நாளுக்கென்று ஆயத்தமாக இருக்க வேண்டும் என்னும் உள்ளத்தை எனக்குத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 9:4