புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 19, 2019)

அநாவசியமற்ற காரணிகள்...

1 கொரிந்தியர் 5:6

கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா?


அயலிலுள்ள வீட்டிற்கு சென்ற ஒரு பெண்மணி, அந்த வீடு நன்றாக அலங்கரிக்கப்பட்டு அழகாக இருப்பதைக் கண்டு, தன்னுடைய வீட் டையும் அப்படி அழகு படுத்த வேண்டும் என எண்ணினாள். ஆனா லும், தன் வீட்டிற்குள் இருக்கும் அநாவசியமற்றதும், அழகை கெடுப் பதுமான சில பணிமுட்டுக்களை எறிந்து போட அவளுக்கு மனதி ல்லை. இந்த சம்பவத்தை ஒப்பனையாக வைத்து, எங்கள் உள்ளான மனிதன் புதிதாக்கப்படுதலைக் குறித்து சிந்தனை செய்வோம். இயேசு கிறிஸ் துவே பாவத்தை நீக்கும் பரிகாரி என்று விசுவாசித்தினாலே நாங்கள், பாவ மன்னிப்பைப் பெற்று, நித்திய வாழ்வை அடையும்படி அழைக்கப்பட் டிருக்கின்றோம். இப்படிப்பட்ட ஒப்பற்ற பாக்கியத்தை எங்கள் கிரியைகளி னாலே நாங்கள் பெற்றுக் கொள்ளவி ல்லை. இது தேவனுடைய ஈவு. நித்திய வாழ்விற்கென்று அழைக்க ப்பட்ட எங்கள் வாழ்வை செழிப்பாக்குவதற்கு தேவன் சித்தமுள்ளவரா கவே இருக்கின்றார். ஆனால், அதற்கு நாங்கள் எங்களை விட்டுக் கொடுக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, சமாதானமான வாழ்வை இயேசு எங்களுக்கு தந்திருக்கின்றார். ஆனால், என் இதயத்திலிரு க்கும், குறிப்பிட்ட நபருடனான பகையை நான் அகற்றிவிட மாட்டேன் என்று ஒரு மனிதன் கூறுவானாக இருந்தால், அவன், மேற்குறிப்பிட்ட கதையிலுள்ள பெண்மணிக்கு ஒத்திருப்பான். எங்கள் உள்ளத்திலிருக் கும், பழையதும், நாட்பட்டதும், நாற்றமெடுக்கும், துர்க்குணங்களை விட்டுவிட மனதில்லாதிருந்தால், இயேசு கொடுத்த சமாதானத்தை நாங்கள் ஒரு போதும் அனுபவிக்க முடியாது. சற்று தரித்திருந்து சிந் தனை செய்யுங்கள். சமாதானமான வாழ்வை கெடுக்கும் காரணிகள் ஏதும் எங்கள் உள்ளத்திலே குடி கொண்டிருந்தால், அங்கே கசப்பான வேர் முளைத்தெழும்பி, முடிவிலே வாழ்க்கையை கெடுத்துப் போடும். ஒரு துளி வி~ம் தானே, தண்ணீருக்குள் கலந்தால் என்ன என்று கூறமுடியுமா? இல்லை. அது போல எங்கள் உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்பட தடையாக இருக்கும் எந்தக் காரணி யையும் எங்களை விட்டு அகற்றி விட வேண்டும். இயேசு தந்த சமா தானமான வாழ்க்கைகையை நாங்கள் காத்துக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

சமாதானத்தின் தேவனே, என்னுடைய உள்ளம் நீர் தங்கும் மாளிகையாக விளங்கும்படிக்கு, உமக்கு பிரியமில்லாத எண்ணங்கள் யாவையும் என்னை விட்டு அகற்றி விட என்னை பெலப்படுத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 பேதுரு 2:1