புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 12, 2019)

தேவனால் உண்டானவைகள்...

அப்போஸ்தலர் 5:39

தேவனால் உண்டாயிரு ந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது;. தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள்...


அந்நாட்களிலே, மரித்து அடக்கம்பண்ணப்பட்ட லாசரு என்னும் மனி தனை இயேசு மரித்தோரிலிருந்தெழுப்பினார். லாசருவினிமித்தமாக யூத ர்களில் அநேகர் போய், இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்தபடி யால், இயேசுவோடுகூட லாசருவையும் கொலை செய்யும்படியாக யூத மதத்தலைவர்கள் ஆலோசனைபண்ணினார்கள். இயேசு தாமே, யாவருக்கும் நன்மை செய்கின்றவர். லாசரு ஒரு எளிமையான மனிதன், ஆனால், மக்களுக்கு உதவி செய்து, அவர்களை தேவனிடம் சேர்க்க வேண் டிய மதத்தலைவர்களோ குற்ற மற்ற வர்களை கொல்லும்படியாக வகை தேடிக் கொண்டிருந்தார்கள். ஏன்? தங் கள் ஸ்தாபனமாகிய மதத்திற்கு, தங் கள் உபதேசங்களுக்கு, தங்கள் கொள் கைகளுக்கு, தங்கள் கிரியைகளுக்கு உடன்பட்டு வராத எவரையும் அவர் கள் அகற்றி விடுவார்கள். இப்படி செய்வதால், தாங்கள் தேவனுக்கு நன்மை செய்கின்றோம் என்றிருந்தார் கள். பிரியமானவர்களே, இன்று நாங் கள் எங்கள் மனநிலைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். கிறிஸ் துவின் நாமத்திலே, உடன் சகோதரர்கள் செய்யும் நற்கிரியைகளுக்கு நாங்கள் எவ்வளவேனும் எதிர்த்து நிற்கக்கூடாது. எங்கள் கொள்கை களின்படியல்ல, வேத வாக்கியங்களின்படி அக்கிரியைகளை ஆராய் ந்து பார்த்து, தேவ வாக்கின்படி செய்யப்படும் எல்லா நற்கிரியை களுக்கும் நாங்கள் ஆதரவாக இருக்க வேண்டும். முடிந்த உத விகளை செய்ய வேண்டும். உதவிகள் செய்யமுடியாத நிலையிரு ந்தால், அக்கிரியைகளை நடப்பிக்கும் சபையாருக்கும், ஊழியர்களு க்காகவும் ஊக்கமாக ஜெபிக்க வேண்டும். ஒரு சமயம், இந்த மத த்தலைவர்கள் இயேசுவின் சீ~ர்களை கைது செய்து, அவர்களை துன்புறுத்தி, தடுக்க முயன்றபோது, அவர்களில் ஒருவராகிய காமாலி யேல் என்னும் மனிதன், “தேவனுக்கு எதிர்த்து போர் செய்கின்றவர்க ளாய் இராதபடிக்கு பாருங்கள்” என்று, மதத் தலைவர்களுக்கு புத்தி மதி கூறினார். நாங்கள் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நிறை வேற்ற அழைக்கப்பட்டவர்கள் என்பதை மறந்து போய்விடாதிருங்கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, உம்முடைய திருச்சித்தத்திற்கு, நேரடி யாகவோ, மறைமுகமாகவோ, நான் எதிர்த்து நிற்காதபடிக்கு அடியேனு க்கு ஞானத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 12:11