புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 10, 2019)

அதிக கனிகள்

யோவான் 15:2

கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகி றார்.


நல்ல உபாத்தியார் போல இருக்க வேண்டும் என்று நேற்றய தினத்தில் தியானித்தோம். அதன் தொடர்ச்சியாக இன்று பிதாவாகிய தேவன்தாமே எப்படியாக நாங்கள் அதிக கனிகொடுக்கும்படியாய் எங் களை சுத்திகரிக்கின்றார் என்பதைக் குறித்து ஆராய்ந்து பார்ப்போம். அதிகப்படியான பாடங்களிலே விசே~ட சித்தி பெற்ற மாணவன், அந்த ஆசிரியரை நோக்கி: “சார், அதிக பாடங்களிலே விசேஷட சித் திகள் பெற்ற என்னை தண்டிக்கின்றீர் களே, ஆனால், எல்லா பாடங்களிலும் குறைந்த புள்ளிகளை பெற்றவனோடு சாந்தமாக பேசிகின்றீர்களே, எனக்கு புரியவில்லை” என்று கூறினால், அத ற்கு என்ன விளக்கத்தை நீங்கள் கொடுப்பீர்கள்? எங்கள் பரம பிதா, கனி கொடாத மரங்களை கனி கொடு க்கும்படியாய், மரத்தை சுற்றி கொத்தி, பசளை போட்டு, நீர் பாய்ச்சி, கனி கொடுக்கும்படியாய் வழிகளை ஏற்படுத்துகின்றார். நல்ல கனி கொடுக்கும் மரங்கள், இன்னும் அதிக நற்கனிகளை கொடுக்கும்படி யாய் அதை கிளை நறுக்கி, களைபிடுங்கி மென்மேலும் சுத்தம் செய் கின்றார். இப்படியாக எங்கள் அன்புள்ள பரம பிதா ஒவ்வொருவ ரையும் நன்றாக அறிந்திருக்கின்றார். சில மாணவர்களுக்கு கொடுக்கும் சிட்சைகள் (சிறு தண்டனைகள், கடிந்து கொள்ளுதல்) அவர்களை மேன்மைப் படுத்தும். ஆனால், சில மாணவர்களை தண்டிக்கும் போது, அவமானம் தாங்க முடியாமல், நிலைதளர்ந்து, கல்வியை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். அதே போலவே எங்கள் சபை ஐக்கிய ங்களில் வரும் மனிதர்களின் நிலையும் இருக்கின்றது. அதனால் பெலமுள்ளவன் குற்றம் செய்தால் பாவம், பெலவீனன்; குற்றம் செய் தால் பாவம் இல்லை என்பது பொருள் அல்ல. அநியாயம் எல்லாம் பாவம் தான். ஆனால், எல்லா மனிதர்களையும் எல்லா வேளைக ளிலும், ஒரே விதமாக நேர்வழிப்படுத்த முடியாது. எனவே, ஒழுங்கு முறைகளையும், நல்வழிப்படுத்துதலையும் குறித்த அறிவுள்ளவர்களாக வும் இருக்க வேண்டும். எங்கள் வாழ்க்கையின் பந்தையப் பொருள் நித்திய ஜீவனை அடைவதாகும். எனவே, அந்த குறிக்கோளை அடையும்படி, இயேசுவை நோக்கி முன்னேறுவோம்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, என் கண்களை எப்போதும் நித்திய ஜீவ னாகிய பரிசுப் பொருளின் மேல் வைத்து முன்னேறிச் செல்ல எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 6:1-13