புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 09, 2019)

நல்ல உபாத்தியாரைப் போல…

1 தெச 5:14

திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.


வகுப்பு ஆசிரியர், முதலாம் தவணைக்குரிய மாணவர் முன்னேற்ற அறிக்கையை ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கிக்கொண்டிருந்தார். அவர், மாணவர்களின் முன்னேற்றத்தைக் குறித்து மிகவும் கரிசனையுள்ளவராக இருந்ததால், பல பாடங்களை சிறப்பாக செய்து, சில பாடங்களில் குறைவு பட்ட மாணவர்கள் சிலரை கடிந்து கொண்டார். வீட்டில் படிக்கக்கூடிய சூழ்நிலை இரு ந்தும், அவற்றை அசட்டை செய்த மாண வர்கள் சிலருக்கு தண்டனையும் வழ ங்கினார். எல்லா பாடங்களிலும் குறை ந்த புள்ளியை எடுத்த ஒரு மாணவனை அழைத்து “தம்பிஇ என்னடா செய்யப் போகின்றாய்?” என கரிசனையுடன் கேட் டார். அவருடைய குரலின் தொனியிலோ, அவர் அந்த மாணவனின் நிலையைக் குறித்து கவலையடைந்திருப்பது தெரிந்தது. அந்த மாணவனுக்கு, வீட்டி லே படிக்கக்கூடிய எந்த சூழ்நிலையோ அல்லது பாடங்களை படிக்க உதவி செய்யவோ யாருமில்லை என்பதை உணர்ந்த ஆசிரியர், அவனை கடிந்து கொள்ளவோ அல்லது தண்டிக்கவோ முற்படவி ல்லை. மாறாக, அவனை அழைத்து, அவனுடைய எதிர் காலத்தைக் குறித்து, அவனோடு சாந்தமாக பேசினார். அந்த ஆசிரியரால், அவ னுடைய சூழ்நிலைகளை மாற்ற முடியாது, ஆனால் அந்த ஆசிரி யரின் உள்ளத்தை சற்று சிந்தித்து பாருங்கள். அதே போல, ஜனங்கள் பலதரப்பட்ட சூழ்நிலைகளில் நம்மிடையே வாழ்ந்து வருகின்றார்கள். சபை ஐக்கியத்திலும் பலதரப்பட்ட ஜனங்கள் வருகின்றார்கள். அவர்களுடைய சூழ்நிலைகளை அறியாமல், எங்கள் பலத்தைஇ பரிசுத்தத்தை மற்றவர்கள் மேல் நாங்கள் திணிக்க முற்படக் கூடாது. சில வேளைகளிலே, நாங்கள் மற்றவர்களின் அவல நிலையை அறி ந்தாலும், எங்கள் சுயபலத்தால் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்ப டுகின்றது. அவ் வேளையில், உங்கள் அன்பை கூட்டி வழங்குங்கள்இ அவர்களுக்காக தினமும் தேவனை நோக்கி ஜெபியுங்கள். வனாந்திரத்திலே நீருற்றுகளை உண்டு பண்ணுவதை போல, தேவன் தாமே அவர்களின் வறண்ட வாழ்க்கையை செழிப்பாகும் போக்கை உண்டு பண்ணுவார்.

ஜெபம்:

பரலோக தந்தையே, என்னுடைய சூழ்நிலைகளை அறிந்து எனக்கு தயவு செய்து வருகின்றீர், அதே போல நானும் மற்றவர்களின் நிலையை உணர்ந்து, தயவுள்ளவனா(ளா)க வாழ கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 41:18-19