புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 08, 2019)

நல்ல ஆயனைப் போல…

ஏசாயா 40:11

மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவ லாடுகளை மெதுவாய் நடத்துவார்.


நீதியை நிலைநாட்ட நியமிக்கப்பட்டவர்கள், அஜாக்கிரதையாக இருந் ததினாலே சில மனிதர்களின் வாழ்க்கையில், சில சந்தர்ப்பங்களிலே, பல துன்பங்கள் ஏற்பட்டதை குறித்து செய்திகளில் கேட்கின்றோம். நித்திய வாழ்வை நோக்கி சென்று கொண்டிருக்கும் நாங்கள், ஜாக்கிர தையுள்ளவர்களாக, தேவனுக்கென்று நல்ல ஸ்தானாதிபதிகளாக இரு க்க வேண்டும். ஒரு ஆத்துமா பாதாளத்திற்கு செல்லாமல் தடுக்க கூடிய சந்தர்ப்பத்தை தேவன் கொடு த்திருந்தால், அதை மனித சட்டங்களி னாலே விட்டுவிடக்கூடாது. எங்கள் வாழ் க்கையின் நிகழ்வுகள், ஒழுங்காக நடை பெற வேண்டும் என்பதற்காக, நாங் கள் சில கொள்கைகள், சட்டதிட்டங் களை ஏற்படுத்திக் கொள்ளலாம். சபை ஐக்கியங்களிலும் இப்படியான ஒழு ங்கு முறைகளை ஏற்படுத்தப்பட்டிருக் கின்றது. இப்படியான நன்மை கருதி ஏற்படுத்தப்பட்ட சட்டதிட்டங்களையும் ஒழுங்கு முறைகளையும், எக்காரணம் கொண்டும் இடையூறு செய்யாமல், கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட வேண் டும் என்று சிலர் கடுமையாக இருப்பதுண்டு. அப்படி கடுமையாக இருப்பதினால் சில வேளைகளிலே, சில ஆத்துமாக்கள் அப்படிப்பட்ட சட்டங்களை சகிக்க பெலன் இல்லாமல் பின்மாற்றமடைந்து போக க்கூடிய சாத்தியங்கள் உண்டு. தேவனால் எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆத்துமாக்கள் விலையேறப்பெற்றது. இயேசு தாமே, ஜெபிக்கும் போது: நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்;. நீர் எனக்குத் தந்த வர்களைக் காத்துக்கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்க தாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒரு வனும் கெட்டுப்போகவில்லை என்று கூறினார். சுமக்க அரிதான சுமை களை மனு~ர்மேல் சுமத்துகிறீர்கள்; என்று, ஒரு சமயம் சட்ட ஒழுங்கு களை நெறிப்படுத்துபவர்களை இயேசு கடிந்து கொண்டார். எனவே, பெலவீனமுள்ளவர்கள் மேல் சுமக்க முடியாத சுமைகளை நாங்கள் சுமத்தக் கூடாது. என்னுடைய சுமை இலகுவானதென இயேசு அழைக் கின்றார். எனவே பெலவீனரை கடினமாகவல்ல மெதுவாய் நடத்துவோம்.

ஜெபம்:

அன்பான ஆண்டவரே, என்னுடைய கொள்கைகளினாலே மற்ற வர்கள் இடறலடைந்து பின்வாங்கிப் போகாதபடிக்கு, அன்பினாலே மற்றவர்களை தாங்க என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 17:12